அதிர்ச்சி! பறக்கும் ரயில்கள் சென்னை மெட்ரோ வசம் செல்லாதாம்! வேற பிளான் என்ன! ஆனாலும் ஒரு நல்ல செய்தி
சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள பறக்கும் ரயில்கள் சென்னை மெட்ரோ வசம் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அந்தத் திட்டத்தில் இப்போது திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் சென்னையில் இருக்கும் டிராபிக் குறித்து தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை. இதனால் மக்களை பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வைக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் இப்போது பேருந்து, புறநகர் ரயில்கள், மெட்ரோ பல்வேறு பொது போக்குவரத்து இருக்கிறது. அதேநேரம் சென்னையில் பறக்கும் ரயில்களும் பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், அவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்ற புகார்களும் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
பறக்கும் ரயில்கள்: இந்நிலையில், எம்ஆர்டிஎஸ் எனப்படும் இந்த பறக்கும் ரயில்கள் சென்னை மெட்ரோ வசம் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இணைப்பு பணிகள் நிறைவடையும் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே இத்திட்டத்தில் பெரிய மாற்றம் நடந்துள்ளது. அதாவது தற்போதைய சூழலில் பறக்கும் ரயில்கள் சென்னை மெட்ரோ வசம் செல்லாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதிய திட்டத்தின்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (சியுஎம்டிஏ) ஆகியவை இணைந்து பறக்கும் ரயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
புது பிளான் என்ன: இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "பறக்கும் ரயில்களைப் பொறுத்தவரை இப்போது புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு உருவாக்கியுள்ளோம். அதன்படி பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கும். பறக்கும் ரயில்களின் செயல்பாடுகளை அந்த அமைப்பே கண்காணிக்கும்.
சுமார் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு இதே நிலை தொடரும்.. அதன் பிறகு அப்போதுள்ள நிலைமையைப் பொறுத்துத் தேவைப்பட்டால் சென்னை மெட்ரோ நிறுவனம் இதைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும்.
என்ன காரணம்: சென்னையில் நடந்து வரும் 2ஆம் கட்டம் பணிகள் மற்றும் மாநிலத்தின் பிற நகரங்களில் மெட்ரோ அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கைகளை உருவாக்குவது போன்ற பணிகளில் சென்னை மெட்ரோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதனால் தற்போதைய சூழலில் பறக்கும் ரயில்களின் சேவையையும் முழுமையாகக் கண்காணிக்க முடியாது. அதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
பறக்கும் ரயில்கள் அமைப்பை எப்படி நிர்வகிக்கலாம்.. அதை எப்படி இயக்கலாம்.. அதன் வணிகத் திட்டம் ஆகியவற்றை தயாரிக்கப் பெருநகர வளர்ச்சி குழுமம் இம்மாத இறுதிக்குள் ஒரு ஆலோசகரை நியமிக்க உள்ளது. மேலும், இது குறித்து விரிவான அறிக்கை உருவாக்கப்பட்டு அது ஜனவரிக்குள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
நல்ல செய்தி: அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆகும் செலவு, பிஸ்னஸ் பிளான், தேவைப்படம் மூலதனச் செலவு, பயணிகள் போக்குவரத்து எந்தளவுக்கு அதிகரிக்கும் என்பது போன்ற முக்கிய பாயிண்டுகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், பறக்கும் ரயில்களுக்காகப் புதிதாக ஏசி பெட்டிகளை வாங்கி, ஏசி மற்றும் ஏசி இல்லாத பெட்டிகளை இயக்கவும் திட்டங்கள் இருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்கள் மோசமாக இருப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில், பயணிகளுக்குச் சிறந்த அனுபவத்தை அளிக்க அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications