சென்னை வியாசர்பாடியில் பயங்கர தீ விபத்து.. 15 குடிசைகள் எரிந்து நாசம்!
சென்னை: சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் 15 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சியால், தீ பரவாமல் கட்டுக்குள் வந்திருக்கிறது. அதேபோல உயிரிழப்புகளும் ஏதும் ஏற்படவில்லை.

இன்று மாலை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. முதலில் ஒரு வீட்டில் பரவிய தீ, அடுத்த சில நிமிடங்களில் மற்ற வீடுகளுக்கும் பரவ தொடங்கியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவலின் பேரில் வந்த 4 தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்துள்ளனர். இதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளன.
ஆனால் விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. அதேபோல யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.'
தீ விபத்துக்கு காரணம் என்ன? மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்மநபர்களின் செயலா? முன் விரோதம் காரணமாக யாரேனும் இந்த செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்களா? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் பரபரப்பான பகுதியான வியாசர்பாடியில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது சலசலப்பை உருவாக்கியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications