ரத்த வெள்ளத்தில் மேஜர் முகுந்த்..! பார்த்து துடித்த நண்பன்..! கடைசி 15 நிமிட வேதனை
சென்னை: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேஜர் முகுந்த் எப்படி உயிரிழந்தார் என்பதைப் பற்றியும் அவரது கடைசி 15 நிமிடங்கள் போராட்ட வாழ்க்கைப் பற்றியும் அவரது நண்பர் ஒருவர் பல தகவல்களைக் கண்ணீர் மல்கப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் வீர மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட'அமரன்' திரைப்படம் வெளியான பிறகு அவரைப் பற்றிய பல உண்மைகளைப் பலரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். 2014இல் ஏப்ரல் 25 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலில் மேஜர் முகுந்த் கொல்லப்பட்டார். அவரது மரணம் நாட்டில் உள்ள பலரை உலுக்கியது. அதற்குக் காரணம், அவரது இளம் மகளை விட்டு அவர் பிரிந்ததை நினைத்து பலரும் கலங்கினர். இவரின் வீர தீர செயலலை பாராட்டி கடந்த 2015 ஆம் ஆண்டு அசோக் சக்ரா விருதை அன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் மேஜர் முகுந்த் எப்படிக் கொல்லப்பட்டார்? அப்போது நடந்தது என்ன? என்பது பற்றி ராணுவ வீரரும் அவரது நண்பருமான ஏழுமலை பல உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு யூடியூப் சேனலுக்கு ஏழுமலை அளித்த பேட்டியில், "முதல்முறையாக 2003 முதல் 2006 வரை நான் ஆர்.ஆரில் இருந்தேன். மீண்டும் 2012 முதல் 2014 வரை ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஷோபியான் பகுதியில் 44 ஆர்ஆர் ரெஜிமென்ட் படைப் பிரிவில் வேலை பார்க்கும் வாய்ப்பு வந்தது. அங்குதான் நான் முதன்முதலாக முகுந்த் வரதராஜனைச் சந்தித்தேன்.
ஒரு ஆபரேஷனில் இணைந்து பணியாற்ற தொடங்கினோம். முகுந்த் அதிகம் யாரிடமும் பழக மாட்டார். குறைந்தது 2 மாதங்களுக்குப் பிறகுதான் நாங்கள் இருவரும் சேர்ந்து பழக ஆரம்பித்தோம். அல்தாப் பாபா ஆபரேஷன் தொடங்கப் போகிறோம் என திடீரென்றுதான் சொன்னார்கள். ஒரு நாள் மற்றும் ஒரு இரவு முழுக்க வேட்டை நடந்தது. அதன்பின்புதான் வெற்றி பெற்றோம். எதிரி படை ஆட்கள் சுடத் தொடங்கினார்கள். அதை எதிர்த்து நாங்களும் குண்டுகளை வீசினோம். நான் தான் தாக்குதல் நடக்கும் பகுதிக்கு அருகிலிருந்தேன். உடனுக்குடன் தகவல் அனுப்பிக் கொண்டே இருந்தேன்.
அப்போதுதான் மாலை 5:30 மணி இருக்கும். மேஜர் முகுந்த் அடிபட்டார். அவரைக் காப்பாற்ற நான் முன்னேறிப் போனேன். அதை உணர்ந்த எதிரி ஆசிப் படை சுட்டார்கள். அதில் விக்ரம் மீது குண்டு பாய்ந்தது. அடுத்து முகுந்த் சுடத் தொடங்கினார். அதில் தீவிரவாதி ஆசிப் உயிரிழந்தார். கூடவே முகுந்த் மீதும் குண்டு பாய்ந்து அவர் காயமடைந்து கீழே விழுந்தார். முதலில் குண்டடிபட்டதை முகுந்த் உணரவில்லை. தரையில் சரிந்து விழுந்த பிறகே அவரால் அதை உணர முடிந்தது.
அவர் விழுவதை நாங்கள் பார்க்கிறோம். ஆனால், உடனே போய் அவரை தூக்க முடியாது. தாக்குதல் பலமாக இருந்தது. 15 நிமிடங்கள் அவர் துடிப்பதைப் பார்க்கிறோம். எங்களால் ஒன்றுமே செய்ய முடியாத சூழல். கண்கள் கலங்கியபடி நாங்கள் மறுபுறம் தவிக்கிறோம். டார்கெட் ஹவுஸ் பக்கம் நான் தான் இருந்தேன். முகுந்த் குண்டடிபட்ட தகவலை நான் தான் ராணுவ அதிகாரிகளுக்குத் தெரிவித்தேன்.

பிறகு நான் தீவிரவாதிகளைச் சுட ஆரம்பித்தேன். இறுதியாக முகுந்த் அருகில் சென்று அவரை தூக்கி இழுத்துக் கொண்டு நம் எல்லைக்கு வந்தேன். அப்போதே அவர் நிலை சரிந்துவிட்டார். முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பினோம். அவர் என் கண்முன் உயிருக்கும் போராடியதைப் பார்த்த போது என் கண்கள் இருண்டுவிட்டன. என் இதயத் துடிப்பு எனக்குக் கேட்கும் அளவுக்கு நான் பதற்றமாக இருந்தேன். பிறகு ராணுவப் படையிலிருந்த ஏணியில் அவரை வைத்து மருத்துவ வாகனத்திற்குக் கொண்டு வந்தோம். அதன்பின் ஹெலிகாப்டர் வந்தது. அவரை சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். என்ன ஆனது? உயிருடன் இருக்கிறாரா? என ஒன்றும் தகவல் கிடைக்கவில்லை.
மறுநாள் மதியம்தான் அவர் வீரமரணமடைந்தார் என செய்தி வந்தது. எங்கள் படைக்கு தலைமைத் தாங்கிய அதிகாரியை இழந்துவிட்டோம் என அப்போதுதான் அறிந்தோம். அவருக்குச் சீருடையில் வீர வணக்கம் செலுத்திட்டு, அறைக்கு வந்து கதறி அழுதோம். ராணுவ உடையில் நாங்கள் அழ முடியாது. அதற்கு இடம் இல்லை. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்ய வேண்டும் என்பதை அறிந்துதான் எல்லையில் தீவிரவாதிகளை எதிர்த்து போராட போகிறோம். எனவே உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் அங்கே இடமில்லை.
அறைக்கு வந்த பிறகு நாங்கள் சாதாரணமான மனிதர்கள். அங்கேதான் நாங்கள் எங்கள் உணர்வுகளைக் கொட்ட முடியும். நாட்டுக்காக ஒரு உண்மையான வீரனாக முகுந்த் இருந்தார். அவரைப் பார்த்துப் பல நேரங்களில் நான் உத்வேகம் பெற்றுள்ளேன். அவரின் கடைசி 15 நிமிடங்களை என்னால் வாழ்நாள் முழுக்க என்றுமே மறக்கவே முடியாது" என்கிறார்
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications