திமுக மாணவர் அணி நிர்வாகிகள் அதிரடி மாற்றம்.. மாணவரணி செயலாளராக ராஜீவ் காந்தி நியமனம்!
சென்னை: திமுக மாணவரணி நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். திமுக மாணவரணி தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, மாணவரணியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல திமுக மாணவரணி செயலாளராக இருந்த சி.வி.எம்.பி எழிலரசன் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த நிர்வாகிகளை அப்பொறுப்புகளில் இருந்து விடுவித்து மாற்று பொறுப்பில் நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், திமுக மாணவரணி தலைவராக பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் காந்தி திமுக மாணவர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, திமுக மாணவர் அணி இணை செயலாளராக இருந்து வந்த பூவை சி. ஜெரால்டு அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்சியின் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக மாணவர் அணி இணை செயலாளராக இருந்து வந்த எஸ். மோகன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திமுக வர்த்தக அணி துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்பு திமுகவின் செய்தி தொடர்பு இணைச் செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி கடந்த 2022 ஆம் ஆண்டு, திமுக மாணவர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். மாணவரணியில் தலைவர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டு, அவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications