நானி எ.பல்கிவாலா நினைவு விருது.. மக்கள் கண்காணிப்பகம் புதிய சாதனை!

மக்கள் கண்காணிப்பத்தின் நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேனுக்கு 16வது நானி எ.பல்கிவாலா நினைவு விருது வழங்கப்பட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் கண்காணிப்பத்தின் நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேனுக்கு 16வது நானி எ.பல்கிவாலா நினைவு விருது வழங்கப்பட உள்ளது.

தேசிய அளவில் மிக உயரிய மற்றும் பிரபலமான விருதுகளில் ஒன்றான 16-வது நானி எ.பல்கிவாலா விருது ஒவ்வொரு வருடமும் முக்கியமான சாதனையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த விருதானது இந்தாண்டு மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும் மூத்த வழக்கறிஞருமான திரு. ஹென்றி திபேனுக்கு வழங்கப்பட உள்ளது.

Makkal Kankanippakam director will get this year Nanabhoy Palkhivala award

இந்தியாவில் சமூக மாற்றத்திற்கு சிறந்து செயலாற்றிய ஆர்வலர்களைத் தேர்ந்தெடுத்து இந்த விருது வழங்கப்படுகிறது. விருது தேர்வுக் குழுவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான திரு. சுஜாதா மனோகர், எஸ். என். வரயஹவா மற்றும் இன்போசிஸ் பவுண்டேசனின் இயக்குநர் சுதா என். மூர்த்தி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதை மும்பையில் உள்ள நானி எ.பல்கிவாலா நினைவு அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.2,50,000 காசோலை வழங்கப்படுகிறது.

இவ்விருது வழங்கும் விழாவானது வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி, காலை 11.00 மணியளவில் மும்பை டாடா தியோட்டர் அரங்கில் நடக்கின்றது. இந்த விருதினை உச்சநீதிமன்ற நீதிபதி திருமிகு. நாரிமன் வழங்குகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+