கமல் நாக்கை அறுப்பேன் என்பதா.. நீக்குங்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை.. மநீம கண்டனம்!
Recommended Video
சென்னை: அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அரவக்குறிச்சியில் பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.
அவரது பெயர் நாதுராம் கோட்சே. இங்கு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை என்றார் கமல். இந்த நிலையில் இந்துக்களை தீவிரவாதி என கமல் கூறியதாக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாக்கை அறுக்க வேண்டும்
இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சிறுபான்மையின வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம்
யாரை திருப்திப்படுத்த கமல் இவ்வாறு பேசி வருகிறார். யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக் கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அறிக்கை
இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடும் கண்டனம்
அவர் கூறுகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் மாண்பும் மனித கண்ணியமும் துளியுமின்றி சட்டவிரோதமாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறுவது கடுமையான கண்டனத்துக்குரியது.

அமைச்சர் பதவி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி துறை அமைச்சராகவும் இருக்கும் ராஜேந்திர பாலாஜி தன் பதவி பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications