ஒரு இடத்திலும் வெல்லாத மநீம.. "அவரால்தான்" கமலுக்கு சறுக்கலா?.. சுதாரிங்க பிக்பாஸ்
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

திமுக
இந்த தேர்தலில் திமுகவை தவிர அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இதில் பேரூராட்சிகளில் பாஜக 150 க்கும் மேற்பட்ட வார்டுகளில் வென்றுள்ளது. அது போல் பாமகவும் கணிசமான இடங்களில் வென்றுள்ளது.

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி 6 இடங்களில் வென்றுள்ளது. அது போல் அமமுகவும் இந்த முறை நன்றாகவே அறுவடை செய்துள்ளது. ஒரத்தநாடு பேரூராட்சியையே அமமுக கைப்பற்றியுள்ளது. முன்னாள் அதிமுக எம்பி வைத்திலிங்கத்தின் தொகுதியான இங்கு அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு அமமுக ஒரத்தநாடு பேரூராட்சியில் வென்றுள்ளது.

கமல்ஹாசன்
கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த முறை கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக கடும் பிரச்சாரம் செய்தார். நிறைய செய்தியாளர்களை சந்தித்தார். மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஓராண்டுக்குள் அவர்கள கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா செய்வது என வீடு வீடாக பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்திருந்தனர்.

மக்கள் நீதி மய்யம்
இத்தனை செய்த பிறகு மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இக்கட்சி சுமார் 1300 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அது போல் சிவகங்கை நகராட்சியில் 1வது வார்டு ம.நீ.ம வேட்பாளருக்கு 1 ஓட்டுகூட கிடைக்கவில்லை. இந்த வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஒரு வாக்கு கூட அளிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
Recommended Video

கமல்ஹாசனின் சறுக்கலுக்கு என்ன காரணம்
அதற்கு மேல் அந்த வார்டில் வேட்பாளருக்கு வாக்கு இருக்குமே அவரும் அவருக்கே போட்டுக் கொள்ளவில்லையா என நெட்டிசன்கள கேலி செய்து வருகிறார்கள். இந்த கேள்வியை கமல்ஹாசன் கேட்பது போல் மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன. கோவை தொழிலதிபர் டாக்டர் மகேந்திரன் கட்சியிலிருந்து விலகிய போதே மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள் ஒதுக்கிவிட்டதாகவும் விலகிவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் இக்கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இன்றி தோற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. சினிமாவையும் அரசியலையையும் ஒரே டிராக்கில் இயக்கலாம் என கமல்ஹாசன் இனியும் சொல்லிக் கொண்டிருந்தால் கட்சி தானாக கரைந்துவிடும். எம்ஜிஆர் உள்ளிட்டோர் அரசியல் பணிக்காக நேரத்தை ஒதுக்கி சாதித்து காட்டினர். தினந்தோறும கட்சியினரை சந்தித்தார். மக்கள் நல பணிகளில் ஈடுபட்டார். ஆனால் கமல்ஹாசன் அப்படியில்லை, தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுகிறது. எனவே இந்த பிரச்சினைகளை எல்லாம் கமல்ஹாசன் சரி செய்தால், கட்சியாவது மிஞ்சும், இல்லாவிட்டால் நெட்டிசன்கள் கிண்டல் செய்வது போல் மக்கள நீதி மய்யம், மக்கள் மீதி மய்யமாகிவிடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications