மீண்டும் அந்த “இருண்ட காலம்” பீதி கிளப்பும் மக்கள் நீதி மய்யம்! முதல்வர் ஸ்டாலினுக்கு வைத்த கோரிக்கை
சென்னை : மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.926 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளதால் மின்சாரம் வாங்க தமிழகத்துக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் அச்சம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, தனியார் நிறுவனங்களிடம் வாங்குவது தவிர, மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது.
இந்நிலையில் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் இன்று முதல் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மின் கட்டண பாக்கி
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 926 கோடி ரூபாய் பாக்கியுள்ளது. நேற்று முதல் ஒன்றிய அரசின் தடை அமலுக்கு வந்திருப்பதால் 10 மில்லியன் யூனிட் மின்சாரத்தை வெளியில் வாங்க முடியாத நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. அதே நேரம் முதற்கட்டமாக 228 கோடி ரூபாய் தொகையை நாளை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மீதி தொகையை தவணை முறையில் செலுத்த உள்ளதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளது.

மக்கள் நீதி மய்யம்
இந்நிலையில் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.926கோடி கட்டண பாக்கி வைத்துள்ளதால் மின்சாரம் வாங்க தமிழகத்துக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் அச்சம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.926கோடி கட்டண பாக்கி வைத்துள்ளதால்,மின்சாரம் வாங்க தமிழகத்துக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக மின்வாரியம்
மாநிலத்தின் மின்சாரத் தேவையில் 3ல் ஒருபங்கிற்கும் குறைவாகவே தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்கிறது. பெருமளவு மின்சாரம் வெளிச்சந்தையில் இருந்துதான் வாங்கப்படுகிறது( தமிழகத்தின் மரபுசார் எரிசக்தி ஆதாரத்தின் 16652 மெகாவாட் மின் நிறுவுதிறனில் 4335மெகாவாட் தனியார் மின் உற்பத்தியிலிருந்தும், 6972மெகாவாட் மத்திய அரசின் மின் நிலையங்களின் பங்காகவும் பெறப்படுகிறது)

இருண்ட காலம்
வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க முடியாவிட்டால், மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை,தொழிற்துறையானது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறைந்த தொகையே பாக்கி உள்ளதாக மின்வாரியம் விளக்கம் அளித்தாலும், அந்தத் தொகையினை உடனடியாகச் செலுத்தி தடையை விலக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அந்த "இருண்ட காலம்" வந்துவிடுமோ என்ற தமிழக மக்களின் அச்சம் போக்கப்படவேண்டும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications