ரூ.2 கோடி செலுத்தினால்தான் படகை விடுவிக்க முடியும்..மாலத்தீவு நிபந்தனையால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த மாலத்தீவு கடற்படை, மீனவர்களின் படகை விடுவிக்க ரூ.2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவகைகுளத்தை சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் 12 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். கடந்த 23 ஆம் தேதி மாலத்தீவு அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மாலத்தீவு கடல் பகுதிக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த மாலத்தீவு கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்து மாலி துறைமுகத்திற்கு அழைத்து சென்றது.

Maldivian government imposed a fine of Rs 2 crore on Tamil Nadu fishermens boat

மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது. மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவலை படகின் உரிமையாளருக்கு மாலத்தீவு கடற்படை கூறிய பிறகே மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள மீனவர்களின் குடும்பத்தினர்கள் அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி எம்.பி கனிமொழியும் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து படகை மீட்கவும் மீனவர்களை விடுவிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை மாலத்தீவு கடற்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. தமிழக மீனவர்கள் 12 பேரையும் விடுவிக்க மாலத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் விசைப்படகுடன் விடுவிக்க வேண்டும் என்று மீனவர்கள் மாலத்தீவிலேயே இருந்து வந்தனர். மீனவர்களை விடுவித்து இருந்த நிலையில், விசைப்படகை விடுவிக்க ரூ.2 கோடி அபராதம் கட்ட வேண்டும் என்று மாலத்தீவு அரசு கூறியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாலத்தீவு அரசின் நிபந்தனையால் தமிழக மீனவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மாலத்தீவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளர். இந்த நிலையில் தான் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+