இந்து குழுமத்தின் தலைவராக மாலினி பார்த்தசாரதி- முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து
சென்னை: இந்து ஊடக குழுமத்தின் தலைவராக மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாலினி பார்த்தசாரதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்து ஊடக குழுமத்தின் தலைவராக பணியாற்றிய என். ராம் (வயது 75) அப்பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து இந்து குழும நிர்வாக இயக்குநர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒருமனதாக மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி, இந்து குழுமத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். மாலினி பார்த்தசாரதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மாலினி பார்த்தசாரதிக்கு தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தமது ட்விட்டர் பக்கத்தில், இந்து குழும நாளிதழ்களின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Dr. மாலினி பார்த்தசாரதி @MaliniP அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களின் சீரிய தலைமையில், ஹிந்து குழுமம் உயர் சிறப்புகளை பெற்று வளர்ச்சியில் சிகரம் தொடட்டும் என வாழ்த்தியுள்ளார்.

கனிமொழி வாழ்த்து
திமுக லோக்சபா எம்.பி கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில், இந்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக மாலினி பார்த்தசாரதிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications