தமிழக அரசியல் களத்தில் சூட்டை கிளப்பும் காங்கிரஸ்! ராகுலை தொடர்ந்து களமிறங்கிய மல்லிகார்ஜூன கார்கே
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இன்று தமிழகத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தமிழகம் வருகிறார்.
எதிர்வரும் லோக்சபா தேர்தல் பாஜக vs இந்தியா கூட்டணி என இருக்கிறது. இந்த தேர்தல் இரண்டு தரப்பினருக்குமே முக்கியமானதாகும். குறிப்பாக பாஜகவை பொறுத்த அளவில், இந்த தேர்தலில் வெற்றிபெற்றால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் தலைவர் என்கிற பொறுப்பை நரேந்திர மோடி பெறுவார். அதேபோல 2025ல் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா வருகிறது. எனவே பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியம்.

மறுபுறம், இந்தியா கூட்டணியில் காங்கிரஸை பொறுத்த அளவில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் பல முக்கிய தலைவர்கள் பாஜகவுக்கு தாவியுள்ளனர். அதேபோல, ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மாநிலங்கள் தற்போது கைநழுவியுள்ளன. எனவே, இந்த முறையும் ஆட்சிக்கு வரவில்லையெனில் ஒரேயடியாக கட்சியை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். அந்த சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது.
இந்நிலையில் தனது பரப்புரையை கட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை மேற்கொள்கிறார்.
பயண திட்டத்தின்படி, புதுவையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கத்தை ஆதரித்து இன்று மதியம் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். அதேபோல கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நெய்வேலியில் பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இறுதியாக, விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ரவிக்குமாரை ஆதரித்து வானூர் கோட்டக்குப்பத்தில் இரவு 7 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.
கடந்த சில தினங்களாக பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இரு தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு வந்திருந்த ராகுல் காந்திக்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு பாஜக பரப்புரைக்கு பெரும் சவால் ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, இன்று மல்லிகார்ஜூனாவை இந்தியா கூட்டணி களமிறக்கியிருப்பது, தேர்தல் களத்தில் மேலும் சூட்டை கிளப்பியிருக்கிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கரூரில் ஜோதிமணி, விருதுநகரில் மாணிக்கம் தாகூர், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம்,
கன்னியாகுமரியில் விஜய் வசந்த், கடலூரில் விஷ்ணு பிரசாந்த், கிருஷ்ணகிரியில் கோபிநாத், நெல்லையில் ராபர்ட் புரூஸ், மயிலாடுதுறையில் சுதா, புதுவையில் வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications