வீட்டு ஓனருக்கே தெரியாமல் வாடகை, விற்பனை என விளம்பரம் செய்து ரூ.1.25 கோடி மோசடி.. சென்னையில் ஷாக்!
சென்னை: போரூர் அருகே வீட்டு உரிமையாளருக்கே தெரியாமல் வாடகை, குத்தகை, விற்பனை என வீட்டை வலைதளங்களில் விளம்பரம் செய்து பலரிடம் லட்சக்கணக்கில் அட்வான்ஸ் வாங்கி ரூ.1.25 கோடி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை போரூர் அருகே கெருகம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டை, வீட்டு உரிமையாளருக்கே தெரியாமல், வாடகை, குத்தகை மற்றும் விற்பனை என வலைதளங்களில் விளம்பரப்படுத்தி, பலரிடம் ரூ.1.25 கோடி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை போரூர் அருகே கெருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவத்ஸ் (43). இவர், தனக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை புகைப்படம் எடுத்து, 'வீடு வாடகைக்கு உள்ளது' என்று விளம்பரப்படுத்தி உள்ளார். மேலும், அந்த வீட்டை வைத்து நோ புரோக்கர் உள்பட பல்வேறு தளங்களிலலும் வாடகை, குத்தகை மற்றும் விற்பனை என்றும் விளம்பரம் செய்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பி, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பலரும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஸ்ரீவத்ஸிடம் முன் பணத்தை கொடுத்துள்ளனர். இதுபோல் 50க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிய ஸ்ரீவத்ஸ், வீட்டில் ஏற்கனவே வாடகை மற்றும் குத்தகைக்கு குடியிருந்தவரை காலி செய்ததும், தன்னிடம் பணம் வழங்கியவர்களில் முன்னுரிமை அடிப்படையில் அந்த வீட்டை பிடித்தவர்களிடம் குறிப்பிட்ட தேதியில் வந்து குடியேறும்படி கூறி அனுப்பி வைத்துள்ளார்.
இதில் ஒரு சிலரிடம் வங்கி கணக்கு மூலமாகவும், பலரிடம் ரொக்கப் பணமாகவும் லட்சக்கணக்கில் ஸ்ரீவத்ஸ் பெற்றுள்ளார். வாடகைக்கு சென்றவர்கள், அங்கு உரிமையாளர் வேறு ஒருவர் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, தங்களிடம் பணம் வாங்கிய ஸ்ரீவத்ஸ் மீதுபோலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஸ்ரீவத்ஸை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications