பெண்ணின் அழகில் மயங்கி.. 5 கிமீ விடாமல் ஃபாலோ செய்து.. சில்மிஷமும் செய்து சிக்கிய நபர்!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெண்ணின் அழகில் மயங்கி.. 5 கிமீ விடாமல் ஃபாலோ செய்து.. சில்மிஷமும் செய்து சிக்கிய நபர்!

    சென்னை: "ஸாரி சார்.. அந்த பொண்ணு ரொம்ப அழகா இருந்தாங்களா.. நான் வேற கொஞ்சம் போதையில இருந்துட்டேனா.. அதான் பின்னாடியே போய் தப்பா நடக்க பார்த்துட்டேன்" என்று நபர் ஒருவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

    சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேளச்சேரி ஷாப்பிங் மாலுக்கு வந்திருக்கிறார். பொருட்களை வாங்கிவிட்டு, திரும்பவும் டூவீலர் எடுத்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் இந்த இளம்பெண்ணை பார்த்துவிட்டார். அதனால் அவரும் பைக்கை எடுத்து கொண்டு பின்னாடியே சென்றுள்ளார்.

    ஆன்லைன்

    ஆன்லைன்

    அந்த பெண் தன் வீடு வரை சென்றபிறகுதான், இந்த நபர் பின்னாடியே வந்தது தெரிந்தது. என்ன விவரம் என்று கேட்கவும், "நீங்க ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் பண்ணீங்க.. அதை தர்றதுக்குத்தான் வந்தேன்" என்று சொல்லி ஒரு பார்சலை நீட்டி உள்ளார்.

    கூச்சல்

    கூச்சல்

    அந்த பெண்ணோ, "நான் எந்த சாப்பாட்டையும் ஆர்டர் பண்ணல.. வெளியே போங்க" என்று சொல்லி உள்ளார். அதற்கு மேல் சும்மா இல்லாத அந்த நபர் பெண்ணிடம் நெருங்கி சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பாராத பெண், கூச்சல் போடவும், ரோட்டில் போய் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனர். ஆனால், அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

    32 வயது

    32 வயது

    பதற்றமாகவும், அதிர்ச்சியில் இருந்தும் மீளமுடியாத பெண், மடிப்பாக்கம் போலீசில் புகார் தந்தார். அப்போதுதான், போலீசார், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்படி, பெண்ணை துரத்தி கொண்டு வந்தவர் பிரசாந்த் என்பது, வயது 32 என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பிரசாந்தை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    ஸாரி சார்

    ஸாரி சார்

    அப்போது, "நான் ஷாப்பிங் காம்ப்ளக்சில் சும்மாதான் நின்னுட்டு இருந்தேன்.. இந்த பொண்ணு அங்க வந்து டூவீலர் எடுத்து கிளம்பினாங்க. ஆனா ரொம்ப அழகா இருந்தாங்க.. எனக்கு பிடிச்சுபோச்சு.. நான் வேற கொஞ்சம் போதையில இருந்தேன்.. அதான் பின்னாடியே போய்ட்டேன்.. என்னையே மறந்துட்டேன்.. அந்த அழகை பார்த்து 5 கிமீ தூரம் போய்ட்டேன்.. பேசணும்னு ஆசையா இருந்ததால்தான், அப்படி செய்தேன்" என்று வாக்குமூலம் தந்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+