காதலியின் 3 மகள்களை கொன்று.. சடலங்களுடன் உறவு.. கொடூரனுக்கு 4 ஆயுள்.. பரபர தீர்ப்பு
4 கொலைகள் செய்தவருக்கு சென்னை கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது
Recommended Video
சென்னை: கள்ளக்காதலியின் 3 மகள்களை கொன்று, அந்த சடலங்களுடன் உறவு வைத்த கொடூரனுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு சொல்லி உள்ளது சென்னை மகிளா நீதிமன்றம்!
காரைக்குடியை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவரது கணவர் சின்னராஜ். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர். 3 பெண் குழந்தைகள் உள்ளதால், அவர்களை காப்பாற்ற பழனியில் உள்ள பேக்கரியில் பாண்டியம்மாள் வேலை செய்து வந்தார்.

அப்போது உதயன் என்ற இளைஞருடன் கள்ள உறவு ஏற்பட்டது. இந்த உறவு தீவிரமானதால், பாண்டியம்மாள் தனது 3 பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, சென்னை ராயப்பேட்டையில் உதயனுடன் தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பித்தார். சென்னையில் ஒரு ஸ்வீட் கடைக்கு ஸ்வீட் சப்ளை செய்துவந்த உதயன் குடும்ப செலவுகளையும் கவனித்து வந்தான்.
ஆனால் நாளடைவில், பாண்டியம்மாளின் 3 பெண் குழந்தைகளுக்கும் உதயன் பாலியல் தொல்லை தர ஆரம்பித்துள்ளான். இதை பாண்டியம்மாளே நேரடியாக பார்த்து, உதயனை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதைதவிர 3 பெண்களில் ஒரு மகளை கட்டித்தரவேண்டும் என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.
மகள்களை நாசம் செய்வதை பொறுக்க முடியாத பாண்டியம்மாள், உதயன் உறவை துண்டித்தார். வீட்டுக்குள்ளும் சேர்க்கவில்லை. இதில் உதயனுக்கு பாண்டியம்மாள் மீது ஆத்திரம் வந்தது. அதனால் அவரையும், 3 பெண்களையும் கொலை செய்ய முடிவு செய்தான்.
அதன்படி கடந்த 2016ம் ஆண்டு, ஜுன் 25-ம் தேதி, திடீரென வீட்டுக்குள் நுழைந்த உதயன், உலக்கையால், பாண்டியம்மாள், 3 பெண்களையும் அடித்து கொலை செய்தான். பிறகு அந்த 3 பெண் குழந்தை சடலங்களுடனும் உறவு கொண்டுள்ளான். இந்த சம்பவம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்தான் தெரியவந்தது. இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் உதயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. உதயன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 4 கொலை வழக்குகளில் 4 ஆயுள் தண்டனைகள் விதித்தும், அந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறி நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளித்தார்.
உதயனை தூக்கில் போடுங்க என்று பாண்டியம்மாளின் குடும்பத்தினர் அன்று கதறி துடித்த நிலையில், இன்று 4 ஆயுள் தரப்பட்டுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications