சென்னையில் கால்களை துண்டாக்கி வாலிபர் கொடூர கொலை! 'திருந்தி வாழ்ந்த' 4 மாதத்தில் தீர்த்துகட்டினர்
சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியில் சீனு என்பவர் வசித்து வந்தார். இவர் மீது சாத்தாங்காடு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் திருந்தி வாழ அவர் முடிவு செய்தார்.
சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியில் வசித்தவர் சீனு. இவர் மீது சாத்தாங்காடு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் திருந்தி வாழ அவர் முடிவு செய்தார்.
இதுதொடர்பாக அவர் போலீசில் பிணை பத்திரம் எழுதி கொடுத்திருந்தார். கடந்த 4 மாதங்களாக எந்த பிரச்சனைகளிலும் அவர் ஈடுபடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மாயம்
இந்நிலையில் நேற்று சீனு தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரது நண்பர் லோகேஷ் மற்றும் கார்த்தி வந்தனர். வேறு சில நண்பர்களுடன் பேச வேண்டி உள்ளது எனக்கூறி அவரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு நீண்ட நேரம் ஆகியும் சீனு வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

பிணமாக மீட்பு
இந்நிலையில் சீனு ஆறு பேருடன் சென்றதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சென்ற திசையில் குடும்பத்தினர் தொடர்ந்து தேடினர். திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே தடம் அருகே சீனு பிணமாக கிடந்தார். அவரை கொடூரமான முறையில் யாரோ கொலை செய்திருந்தனர். அவரது இரண்டு கால்களும் வெட்டப்பட்டு தனித்தனியே வீசப்பட்டு கிடந்தது.

கொலையை மறைக்க...
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சென்னை கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவரை கொலை செய்தவர்கள், கொலையை மறைக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதற்காக அவர் ரயிலில் அடிபட்டு இறந்ததாக போலீசாரை நம்ப வைக்கும் நோக்கத்தில் கால்களை தனியே வெட்டி வீசியதும் தெரியவந்தது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

முன்விரோதமா...
இருப்பினும் அவரை யார் கொலை செய்தனர், எதற்காக கொலை செய்தனர் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக அவரது நண்பர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.நான்கு மாத காலமாக திருந்தி வாழ்ந்து வந்த நிலையில் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications