சினிமாவிலும் அரசியலிலும் 'டூப்' அறியாதவர்.. விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை காலமானார். திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கவிஞர் வைரமுத்து விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை காலமானார். விஜயகாந்த் மறைவையடுத்து அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதேபோல் கவிஞர் வைரமுத்து விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Man who honest in cinema and politics, Vairamuthu pay tribute to DMDK Leader Vijayakanth

வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெள்ளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
எரிமலை எப்படிப் பொறுக்கும்
என்ற என் பாடலுக்கு
உயிர்கொடுத்த கதாநாயகன்
உயிரிழந்து போனார்

திரையில் நல்லவர் ;
அரசியலில் வல்லவர்
சினிமாவிலும் அரசியலிலும்
'டூப்' அறியாதவர்

கலைவாழ்வு பொதுவாழ்வு
கொடை மூன்றிலும்
பாசாங்கு இல்லாதவர்
கலைஞர் ஜெயலலிதா என
இருபெரும் ஆளுமைகள்
அரசியல்செய்த காலத்திலேயே
அரசியலில் குதித்தவர்

எதிர்க்கட்சித் தலைவர் என்ற
உயரம் தொட்டவர்
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசாதவரை
நில்லென்று சொல்லி
நிறுத்திவிட்டது காலம் வருந்துகிறேன்

கண்ணீர் விடும்
குடும்பத்தார்க்கும்
கதறி அழும்
கட்சித் தொண்டர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.. இவ்வாறு வைரமுத்து ட்வீட் போட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+