குடும்ப அட்டை வைத்திருப்போரின் கவனத்திற்கு! இதை உடனே செய்யுங்க.. இல்லை எனில் கார்டு போயிடும்!
சென்னை: குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இதுநாள் வரை பதிவு செய்யாதவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சாமானிய மக்களும் உணவு பஞ்சத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக ரேஷன் விநியோக முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் சுமார் 33,222 நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆண்டுக்கு ஒரு முறை வேட்டி, புடவை உள்ளிட்டவை விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 2025ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் சுமார் 18 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் புதியதாக வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். ரேஷன் அட்டைகள் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில் ரேசன் அட்டைகள் ஸ்மார்ட் கார்டுகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக ரேசன் அட்டையில் பெயர் இருப்பவர்கள் தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்திருக்க வேண்டும். ஏற்கெனவே பதிவு செய்யாதவர்கள் வரும் 31ம் தேதிக்கு முன் பதிவு செய்திட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்த தொடங்கியுள்ளனர். ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்தவராக இருந்து, ரேசன் அட்டையில் பெயர் மாற்றங்களை செய்திருந்தால் அருகில் உள்ள ரேசன் கடைகளுக்கு சென்று ரேகை பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ கூட அருகில் உள்ள ரேசன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்துக்கொள்ளலாம். உங்கள் அட்டையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு பேரின் ரேகைகளையும் பதிவு செய்வது அவசியம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கூறியுள்ளனர்.
ரேசன் அடை அடையாள, இருப்பிட சான்றுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்பதற்கு இதுதான் ஆதாரம். சென்னையில் வசித்து வருபவர்கள் வெள்ளம், மழையால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான இழப்பீடு பெற ரேசன் அட்டை முக்கியம். மட்டுமல்லாது அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் அட்டை மிக முக்கியமாக இருப்பதால், உடனடியாக ரேகையை பதிவு செய்து அட்டை ரத்தாவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications