திமுக தேர்தல் அறிக்கை 2021: 24 வாக்குறுதிகளுடன் மீனவர் வாக்குகளுக்கு 'பென்னம்பெரிய' வலை வீச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் 2 லட்சம் புது வீடுகள் கட்டித் தரப்படும் என்பது உட்பட மீனவர் நலன்சார்ந்து 24 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் மீனவர் நலன் சார்ந்து கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மீனவர் சமுதாயத்தை கடல்சார் பழங்குடியின மக்கள் என்று பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கும் பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகளையும் மீனவர்கள் பெறுவத்ற்கும் திமுக முயற்சி செய்யும்.

Manifesto For 2021 Tamil Nadu Assembly Elections: DMK 24 Promises to Fishermen

இந்திய- இலங்கை கடற்கரைப் பகுதிகளில் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்கிட மத்திய அரசை திமுக வலியுறுத்தும்.

மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் மீனவர் வீட்டு வசதி வாரியத்தால் கட்டித் தரப்படும்
.
தேசிய மீனவர் நல ஆணையம் அமைத்திட வேண்டும் என்று தொடர்ந்து திமுக மத்திய அரசை வலியுறுத்தும்.

மீனவர் நலனுக்கு எதிரான மீனாகுமரி குழு பரிந்துரைகளை திரும்பப் பெற வேண்டும் என திமுக வலியுறுத்தும்.

மீனவர் சங்கங்களின் பிரமாண வாக்குமூலத்தின் அடிப்படையில் மீனவர் இறப்புச் சான்றிதழ் உடனே வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்வளத்துறை அமைச்சர்- மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்புடன் 3 மாதங்களுக்கு ஒருமுறை மீனவர் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

புதிய மீன்வளக் கல்லூரிகள், கடல்சார் கல்லூரிகள் உருவாக்கப்படும்; மீனவர் பகுதிகளில் புதிய பள்ளிகள் தொடங்குதல்; ஏற்கனவே உள்ள பள்ளிகளை மேம்படுத்துதல்

மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ரூ5,000-ல் இருந்து ரூ8,000 ஆக உயர்த்தப்படும்

மானிய விலை லிட்டர், டீசல் அளவு உயர்த்தப்படும். மானிய விலையில் ஐஸ் பெட்டிகள் வழங்கப்படும்.

மீனவர் கிராமங்களில் மீன் உலர்த்தும் தளம் அமைக்கப்படும். இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+