2 பெண்களை நிர்வாணப்படுத்திய கும்பல்.. மவுனம் கலைக்காத மோடி! பாடகி சின்மயிக்கு வந்த கோபம்! அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிப்பூரில் தொடரும் வன்முறைக்கு நடுவே பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. இதுபற்றி பிரதமர் மோடி மவுனமாக இருந்து வரும் நிலையில் பாடகி சின்மயி அதிருப்தியடைந்து விமர்சனம் செய்துள்ளார்.

மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்நிலையில் தான் மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் வன்முறை நடந்து வருகிறது. இங்கு வசிக்கும் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர்.

Manipur Violence: Singer Chinmayi attacks Modi she says not a word from the PM after the women naked video

அதேபோல் மைத்தேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி இருபிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.

இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் நேற்று அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது. அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த 2 பழங்குடியின பெண்களை மைத்தேயி மக்கள் தான் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்தாலும் கூட இன்னும் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல அமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இருப்பினும் பிரதமர் மோடி இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து அவர் மவுனம் காத்து வருகிறார். இதனால் இந்த பிரச்சனை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க உள்ளது. இந்நிலையில் பாடகி சின்மயி பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

‛‛பிரதமரிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. இதுதொடர்பாக அவர் பேசவோ, ட்வீட் செய்யவோ, அறிக்கை வழங்கவோ இல்லை. அதேபோல் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இருந்தும் எதுவும் வரவில்லை. ஹத்ராஸ் முதல் கதுவா சம்பவம் வரையும், குல்தீப் செங்கர், பில்கிஸ், பிரிஜ்பூஷன் விவகாரத்திலும் எதுவும் சொல்லவில்லை. மொத்தத்தில் ஒன்றும் இல்லை'' என சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+