ட்விஸ்ட்! மனோ மகன்களை உருட்டுக்கட்டையால் தாக்கும் 16 வயது சிறுவன்! புதிய சிசிடிவியில் பகீர்
சென்னை: பிரபல திரைப்பட பின்னணி பாடகரான மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் திடீர் திருப்பமாக புதிய சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மனோவின் மகன்கள் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை.
சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் மெயின் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு ஷாகீர், ரபீக் என இரு மகன்கள் உள்ளனர். கடந்த 10-ஆம் தேதி இரவு மனோவின் மகன்கள் இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் குடிபோதையில் நின்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலர், மனோவின் வீட்டின் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு மனோவின் வீட்டை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்றதாக தெரிகிறது. இதை பார்த்த மனோவின் மகன்கள், எதற்காக எங்களது வீட்டை நோட்டமிட்டவாறு செல்கிறீர்கள் என கேட்டதாக தெரிகிறது.
மேலும் 16 வயசு சிறுவனையும் கிருபாகரன் என்ற 20 வயசு இளைஞரையும் மனோவின் மகன்கள் தாக்கியதாக தெரிகிறது. இதனை கண்டதும் அவர்களுடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் 16 வயசு சிறுவன், கிருபாகரன் இருவரையும் அவர்கள் முட்டிப் போட வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மனோவின் மகன்களின் நண்பர்களான விக்னேஷ் (28), தர்மா (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இதனிடையே மனோவின் மகன்கள் தரப்பிலும் தங்களை எதிர்தரப்பினர் தாக்கியதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சிறுவர்களை மனோவின் மகன்கள் போலீஸார் முன்னிலை தாக்குவது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாடகர் மனோவின் மகன்கள் ஷாகீர், ரபீக் ஆகியோரை 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் சேர்ந்து உருட்டுக் கட்டை , கற்களை கொண்டு தாக்கும் காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் மனோவின் மகன்கள் இருவரையும் 16 வயசு சிறுவன் உள்பட 8 பேரும் கல், உருட்டுக் கட்டையால் தாக்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனோவின் மகன்களை போலீஸார் முதலில் ஈசிஆரில் தேடி வந்த நிலையில் அவர்கள் ஆந்திராவில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு தனிப்படை போலீஸார் விரைந்து சென்று தேடி வருகிறார்கள். இன்று 7ஆவது நாளாகியும் இதுவரை அவர்கள் பிடிபடவில்லை. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர்கள் மீது தவறான சித்தரிப்புக்காக பயந்து போய் மறைந்திருக்கிறார்கள் என்றும் அவர்களுடைய தாய் ஜமீலா பேட்டி அளித்திருந்தார்.
மனோவின் மகன்களை போலீஸார் தேடி வரும் நிலையில் அவர் தாய் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 10-ஆம் தேதி எனது மகன்களுடன் வெளியே சென்றோம். அப்போது எங்களை இருவர் குறுகுறு என பார்த்தனர். அவர்களிடம் போய், "எங்களை ஏன் அப்படி பார்க்கிறீர்கள்" என என் மகன் கேட்டான்.
அதற்கு அவர்கள் சினிமாக்காரங்க தான நீங்க, தெலுங்கு கொல்டி போன்ற தகாத வார்த்தைகளை பயன்படுத்தினர். உடனே என் மகன், எதுக்குடா இப்படி பேசுறீங்க என கேட்டார். அப்போது அங்கிருந்த ஒரு பையன் ஓடி போய் போன் பண்ணிட்டு வந்தான். உடனே 4 பேர் வந்துவிட்டனர்.
அவர்களும் எங்களை தகாத வார்த்தைகளில் பேசினார். உடனே நான் சண்டை எல்லாம் வேண்டாம் என சொல்லி என் மகன்களை அங்கிருந்து அழைத்து சென்றேன். அப்போது அவர்கள் கற்களை கொண்டு என்னையும் என் மகன்களையும் தாக்கினர். இதனால் தற்காப்புக்காக என் மகன் உருட்டுக் கட்டையை எடுத்தான். அதன் பிறகுதான் நான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலீஸை வரவழைத்தேன்.
பிறகு என்னுடைய மகன் போலீஸில் புகார் கொடுக்கலாம் என்றான். நான்தான் வேண்டாம் என சொல்லிவிட்டேன். சிறுவர்கள் மீது புகாரளித்தால் அவர்களது வாழ்க்கை வீணாகிவிடும் என சொல்லிவிட்டேன். அடுத்த நாள் என் மகன்கள் மருத்துவமனைக்குள் சென்று வீடு திரும்புவதற்குள் அவதூறு பரப்பிவிட்டனர்.
இந்த அவமானத்தால் வீட்டிற்கே அவர்கள் வரவில்லை. ஆனால் தலைமறைவாக இல்லை. என் மகன்கள் மது போதையில் இல்லை. எங்கள் பக்கம் தவறில்லை. அதை நிரூபிப்போம் என அவர் தெரிவித்திருந்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications