இரவோடு இரவாக மன்சூர் அலிகான் நீக்கம்! அப்போ இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் அடுத்த தலைவர் யார்
சென்னை: இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி என்ற கட்சியின் தலைவராக இருந்தார். சமீபத்தில் இவரது கட்சி லோக்சபா தேர்தல் தொடர்பாக அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி இருந்தது.

அதிமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மன்சூர் அலிகான் ட்விஸ்ட் கொடுத்தார். அதிமுக விடுத்த அழைப்பின் பெயரிலேயே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குச் சென்றதாகக் கூறிய மன்சூர் அலிகான், அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
மன்சூர் அலிகான்: இதற்கிடையே இப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பு அக்கட்சியில் இருந்து வெளியாகியுள்ளது. இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வளசரவாக்கத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நடைபெற்ற நிலையில், அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த செயற்குழு கூட்டத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அக்கட்சியின் நிர்வாகிகள் கூறினர்.
என்னாச்சு: இது தொடர்பாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் கூறுகையில், "வளசரவாக்கத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கட்சியில் உள்ள தலைவர் பதவியை நீக்கவும் தீர்மானம் நிறைவேற்றினோம். தலைவரின் அதிகாரம் அனைத்தும் பொதுச்செயலாளருக்கு வழங்கப்படும் என்ற தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அவர் தேர்தல் நெருங்கும் போதெல்லாம் புதிது புதிதாக கட்சி ஆரம்பிக்கிறார்.. பிறகு காணாமல் போகிறார்.. ஆனால் நாங்கல் தேர்தலைக் கடந்தும் இருக்க வேண்டும் என்ற நினைப்பவர்கள். இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் தானா முடிவுக்கு எடுக்கிறார். யாரோ சொல்லி தகவல்களை எல்லாம் வைத்து முடிவு எடுக்கிறார். நிர்வாகிகளுடன் எந்தவொரு முடிவு குறித்தும் ஆலோசிப்பதில்லை.
என்ன காரணம்: வாய்க்கு வந்ததை ஊடகங்களில் பேசிவிட்டு செல்கிறார். இதனால் கட்சி நடத்துவதில் பிரச்சினை ஏற்படுகிறது. இது தேர்தல் காலம்.. இந்தக் காலத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போது தான் வரும் காலத்தில் கட்சியால் தொடர்ந்து செயல்பட முடியும். இதன் காரணமாகவே அவரை கட்சியில் இருந்து நீக்க ஒரு மனதாக முடிவு செய்தோம். இப்போதைக்குப் பொதுச்செயலாளருக்கு அனைத்து அதிகாரமும் மாற்றப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு பிறகு புதிய தலைவரைத் தேர்வு செய்யலாமா.. இல்லை இப்போது இருப்பது போலவே பொதுச்செயலாளர் தலைமையில் இயங்கலாமா என்பது குறித்து முடிவெடுப்போம். அவர் விடிந்தால் ஒரு பேச்சு என இருக்கிறார். அதெல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. தற்போதைய சூழலில் அவரை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளோம். அவர் கட்சியின் தொண்டராக மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications