மன்சூர் அலிகான், திரிஷா மோதல்: நடிகர் விஜய் விவகாரத்தை முன் வைத்து நடிகர் சங்கம் மீது சீமான் தாக்கு!
சென்னை: மன்சூர் அலி கான் விவகாரத்தில் மட்டும் செயல்படும் நடிகர் சங்கம், மகளிர் ஆணையம் நடிகர் விஜய், மணிப்பூர் விவகாரங்களில் எங்கே போனது? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
லியோ படத்தில் நடிகை திரிஷாவுடன் நடிப்பது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: தம்பி, மன்சூர் அலிகான் என்ன பேசினாருன்னு நான் கேட்கலை.. அது என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெரியாது.. தனிப்பட்ட முறையில் மன்சூர் அலிகான் வேண்டும் என்றே அப்படி பேசியிருப்பார்னு தெரியலை.. விளையாட்டாக கூட நகைச்சுவைக்காக சொல்லி இருக்கலாம். அதனால் பல பேர் மனது காயப்பட்டிருந்தால் அதற்கு அது தவறுதான்.. ஒரு வருத்தம் தெரிவித்துவிட்டு போயிருக்கலாம். மன்சூர் அலிகான் மனச்சான்றுக்கு தவறு என படவில்லை எனில் அதை செய்ய மறுப்பார்தானே..

பொள்ளாச்சி, ஶ்ரீமதி விவகாரம்: இதைவிட எல்லாம் பெரிய பிரச்சனை இருக்கிறது.. பொள்ளாச்சியில் கதற கதற பல பெண்களை கூட்டு வன்புணர்வு செஞ்சாங்க.. தங்கை ஶ்ரீமதி எப்படி இறந்தார்னு யாருமே சொல்லலை... 8 விவசாயிகள் மீது ஏன் குண்டாஸ் போட்டீங்கன்னு நீங்க யாருமே கேட்கலை.. எவ்வளவோ பிரச்சனைகள் நம்மை சுற்றி நடக்குது. புகழ்பெற்ற கலைஞர்களுக்கான பிரச்சனை என்கிற போது அதீதமான செய்தியாகிறது. அண்ணன் மன்சூர் அலிகான் என்ன பேசினார் எனவும் தெரியாது.. என்ன நடக்குதுன்னும் தெரியாது. அதை கவனிக்க நேரமில்லை. ஆனாலும் அது விரும்பத்தகாத நிகழ்வுகள்தான். இதனை தவிர்த்துவிடுங்கள்.
இதெல்லாம் விவாதிக்கனுமா?: மன்சூர் அலிகான் இயற்கையாகவே வேடிக்கையாகப் பேசுகிறவர்; யார் மனதையும் காயப்படுத்த வேண்டும் என பேசுகிறவர் அல்ல. நகைச்சுவையாக பேசுகிறவர். அதை இவ்வளவு தூரம் எடுத்து விவாதிக்கனுமான்னு தோணுது?
விஜய்யும் நடிகர் சங்கமும்: நடிகர் விஜய்க்கு பிரச்சனை வரும் போது நடிகர் சங்கம் பேசியிருக்கா? நடிகர்களின் திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத போது நடிகர் சங்கம் பேசியிருக்கிறதா? விஜய்யை விட சிறந்த நடிகர் இருக்காரா? அவருக்கு ஒரு பிரச்சனை.. அதை பேசியிருக்கா? நடிகர்களுக்கு என ஒரு சங்கம் இருக்கிறதா தமிழ்நாட்டில்? வேணும்னா பேசும்.. இல்லைன்னா பேசாது. இவ்வளவு நாளா நடிகர் சங்கம் இயங்கியதா? என்றே தெரியலை.. கருணாநிதிக்கு பாராட்டு விழா என்றவுடன் வெளியே தெரியுது. 4 இடத்துக்கு போய் அழைப்பிதழ் தரும்போதுதான் நடிகர் சங்கம் இருக்குன்னு தெரியுது.
மணிப்பூர் விவகாரம்: மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்தி சென்று கொலை செய்த போது மகளிர் ஆணையம் என்ன செய்தது? தலையிட்டதா? பல ஆயிரம் பேர் மணிப்பூரில் கொல்லப்பட்ட போது தலையிட்டதா? 8 வயது சிறுமி ஆசிபா வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் எங்கே போனது மகளிர் ஆணையம்? மகளிர் ஆணையம் என்பது உயிர்ப்போடு இருக்கா? தமிழ்நாட்டில் எத்தனை வன்புணர்வு கொலைகள் நடந்தது.. மகளிர் ஆணையம் பேசியதா? இவ்வாறு சீமான் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications