மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை.. ஐசியூவில் திடீர் அட்மிட்.. தற்போது எப்படி இருக்கிறார் மன்சூர்?
சென்னை: பிரச்சாரத்தின்போது, திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மன்சூர் அலிகான் இந்த முறையும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்... வேலூர் தொகுதியில் களமிறங்கியிருக்கிறார்.. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி, பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த் ஆகியோரை எதிர்த்து மன்சூர் அலிகானும் வேலூரில் போட்டியிடுகிறார்.

இதையடுத்து, மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. வழக்கம்போல் தன்னுடைய பாணியிலேயே மன்சூர் அலிகானும், வேலூர் தொகுதியில் முகாமிட்டு பலாப்பழம் சின்னத்துடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
தீவிர வாக்கு சேகரிப்பு: கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக அரசுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, தன்னுடைய சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார்..
நேற்று தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய கடைசி நாள் ஆகும்.. மாலை 6 மணியுடன் அனைத்து வகையான பிரச்சாரமும் முடிவடைந்தது... கடைசி நாள் என்பதால், வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மன்சூர் அலிகான் தீவிரமான ஓட்டுவேட்டையில் இறங்கினார்.. எனவே, குடியாத்தத்துக்கு வாக்கு சேகரிக்க சென்றார்.. அப்போது திடீரென அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது..
திடீர் அனுமதி: எனவே, குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு, சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார் மன்சூர் அலிகான். டாக்டர்கள் அவருக்கு தீவிரமான சிகிச்சையை தந்து வருகிறார்கள்..
உடல் நலம் பாதிக்கப்பட்டதுமே, அவசர அவசரமாக குடியாத்தத்தில் தனியார் மருத்துவமனையில் மன்சூர் அலிகானை அனுமதித்துள்ளனர்.. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. அவசர சிகிச்சையை பெற்ற நிலையிலும், மன்சூர் அலிகான் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனால், மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.. சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை: கல்லீரல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மன்சூர் அலிகான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சையை டாக்டர்கள் வழங்கி வருவதாகவும் முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகின... தற்போது, நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக மற்றொரு தகவல் வெளியாகி வருகின்றன.
ஆனால், தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது மன்சூர் அலிகானுக்கு உடல்நிலை இயல்பாக இருக்கிறதாம்.. எனவே, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications