"டோர் டெலிவரி" செய்யப்போறவங்கதான் ஜெயிப்பாங்க.. இதுக்கு ஏன்பா என்ன காப்பி பண்றீங்க? மன்சூர் கிண்டல்
சென்னை: இந்த உள்ளாட்சித் தேர்தலில் "டோர் டெலிவரி" செய்ய போறவங்கதான் ஜெயிக்க போறாங்க. இதற்கு ஏன் என்னை காப்பி செய்றீங்கள் என மன்சூர் அலிகான் கிண்டல் செய்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்களும் அரசியல் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக செய்யும் அலப்பறைகள் இருக்கிறதே அப்பப்பா! டீ போட்டு கொடுக்கிறார்கள். பஜ்ஜி கடைகளுக்கு சென்றால் வேட்பாளர்கள் பஜ்ஜி போட்டு கொடுக்கிறார்கள்.

டீ, காபி
டீக்கடையில் டீ, காபி போட்டு கொடுப்பார்கள். ஹோட்டலுக்கு சென்றால் அங்குள்ளவர்களுக்கு சாப்பாடு பரிமாறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அது போல் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தால் அங்கு போய் வாக்கு கேட்கும் போது தண்ணீர் பிடித்து கொடுப்பது. தண்ணீர் பம்பில் தண்ணீர் அடித்து கொடுப்பது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.

காய்கறி விற்றுக் கொடுப்பது
பூக்கட்டி கொடுப்பது, காய்கறி விற்றுக் கொடுப்பது, கறி வெட்டி கொடுப்பது, காலில் விழுந்து வாக்கு கேட்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். சாணி அள்ள உதவியும், கொசு மருந்து அடித்தும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதை பார்க்கிறோம். இன்னும் சிலர் மாஸ்க் தந்தும், கபசுரக் குடிநீர் கொடுத்தும் வாக்கு சேகரிக்கிறார்கள்.

திண்டுக்கல் தொகுதி மன்சூர் அலிகான்
இதையெல்லாம் பார்க்கும் போது கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மன்சூர் அலிகான்தான் நினைவுக்கு வருகிறார். அவர்தான் அங்கு மக்களுடன் நெருக்கமாக இருக்க அவர்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். அதாவது குப்பை வண்டியை ஓட்டி சென்று வாக்கு சேகரித்தார். தெருவை தூய்மை செய்வது, காய்கறிகளை விற்பது , இளநீர் வெட்டிக் கொடுப்பது, மீன்களை வெட்டிக் கொடுத்தும் மீன் மார்க்கெட்டில் வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல் எம்பி
எனினும் திண்டுக்கல் எம்பி தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். தற்போது உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களின் செயல்களை பார்த்து மன்சூர் அலிகான் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் , யப்பா என்னப்பா தேர்தல் நிற்பவர்கள் எல்லாம் திண்டுக்கல் எம்பி தேர்தலில் நான் செய்ததையே செய்றீங்க.

ஜாலிதான்
பார்க்க ஒரே ஜாலியா இருக்கு. நான் போனேன் காய்கறி நறுக்கினேன், மீன், மட்டன் வெட்டினேன், பரோட்டா போட்டேன், டீ ஆற்றினேன், ரோட்டை கூட்டினேன் பெருக்கினேன். பச்சை காய்கறிகளை சாப்பிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். அதையெல்லாம் இவங்க செய்யலை. என்ன நான் உண்மையா செய்தேன். இவங்க போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள். பரவாயில்லை.

புகார்
எல்லா வேட்பாளர்களுக்கும் நடிகர் மன்சூர் அலிகானின் வாழ்த்துகள். எப்படியும் நாளையோ நாளை மறுநாளோ டோர் டெலிவரி செய்ய போறவங்கத்தான் ஜெயிக்க போறாங்க. அவர்களுக்கும் எனது வாழ்த்துகள் என தெரிவித்தார். டோர் டெலிவரி என மன்சூர் அலிகான் சொல்வது கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறப்படும் புகாரை சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications