அந்த புளிச்ச மாவு செய்யுற வேலையை பாருங்க... கவிதையாக பொங்கிவிட்டார் மனுஷ்யபுத்திரன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயமோகனின் புளித்த மாவு விவகாரம் ஏற்படுத்தியிருக்கும் அலைகள் இப்போதைக்கு ஓய்வதாக இல்லை போலும்... கவிஞர் மனுஷ்யபுத்திரன் இந்த புளிச்ச மாவு விவகாரத்தை முன்வைத்து 'நெடுங்கவிதை' ஒன்றையே எழுதியிருக்கிறார். இந்த கவிதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகா கலைஞனும் புளித்த மாவும் என்ற தலைப்பில் மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை:

துரதிஷ்டம் பிடித்த இரவொன்றில்
மகா கலைஞன் ஒருவனை
விதி மாவுக்கடை ஒன்றை நோக்கி
அழைத்துச் சென்றது

Manushyaputhirans poem on Jeyamohan Issue

மகா கவிஞன் ஒருவனுக்கு
மதமேறிய கோயில் யானை ஒன்றால்
துயரம் காத்திருந்ததுபோல
மகா கலைஞனுக்கு
ஒரு குடிவெறியேறிய
மாவுக்கடைக்காரன் வடிவில்
துயரம் காத்திருந்தது

இப்படித்தான் தோழர்களே
வரலாற்றில் மகத்தான சம்பவங்கள்
முதல் முறை அவலத்திலும்
இரண்டாம் முறை கேலிக்கூத்திலும் முடிகின்றன

ஒரு புளித்த மாவு பாக்கெட்டிற்குள்
காப்பியங்களை கறைப்படுத்தும்
சாத்தானின் கைகள் ஒளிந்திருப்பதை அறியாமல் மகா கலைஞன்
மாவுப்பாக்கெட்டுடன் வீடு திரும்பினான்

புளித்த மாவிலிருந்த
உயிர்க்கொல்லி பாக்டீரியாக்கள்
கண் விழித்து எழுந்ததை
தன் கூர்மையான படைப்புக் கண்களால் கண்டுகொண்ட மகாகலைஞன்
திடுக்கிட்டு மாவுபாக்கெட்டோடு
கடை நோக்கி விரைந்தான்
நீதி கேட்டு ஒரு நகரை எரித்த நிலம் இது
அறத்திற்காக பெற்ற மகனை
தேர்க்காலிட்ட நாடு இது
ஒரு புளித்த மாவுக்கான நீதி
பொங்கும் நேரம் வந்துவிட்டதை
யாருமே கவனிக்கவில்லை

ஏற்கனவே புளித்த வாழ்க்கையில்
புளித்த சாராய போதையில்
புளித்த மாவுவிற்ற கடைக்காரனால்
ஒரு மகா கலைஞனின் மொழியை
புரிந்துகொள்ள முடியவில்லை

பட்டத்து யானையின் காதில் புகுந்த
எறும்பைபோல
மகா கலைஞனின் தலைக்குள் புகுந்துவிட்ட
புளித்த மாவின் பாக்டீரியா
காவியச்சுவை குன்றிய
மானுட நடத்தை நோக்கி
மகா கலைஞனை நடத்தியது
அவன் அறம் கூறி வீசி எறிந்த
புளித்த மாவு பாக்கெட்
தரையில்பட்டு சிதறியபோது
பிரளயம் தொடங்கியது

மாவிலிருந்த
பல்லாயிரம் பாக்டீரியாக்கள்
பரவத் தொடங்கின
முதலில் கடைத்தெருவில்
பரவிய பாக்டீரியா
பிறகு அடுத்த தெருவுக்கு பரவியது
பிறகு பக்கத்து ஊருக்கு பரவி
சிற்றூர்களெங்கும் பரவியது
சிற்றூர் தாண்டி
பெரு நகரத்தையும் ஆக்ரமித்த
புளித்த மாவின் பாக்டீரியா
கடல்தாண்டி புலம் தாண்டி
நாடு கடந்து பரவத் தொடங்கியது

ஒரு பாக்டீரியா
மகாகலைஞனுக்காக பேசியது
இன்னொரு பாக்டீரியா மாவுக்கடைக்காரனுக்காக பேசியது
இன்னொரு பாக்டீரியா புளித்த மாவின் அரசியல் பேசியது
வேறொரு பாக்டீரியா சமூக நீதி பேசியது
சில பாக்டீரியாகள் அறம் பேசின
சில பாக்டீரியாக்கள் மறம் பேசின
சில பாக்டீரியாக்கள் புறம் பேசின
மகா கலைஞனின் தத்துவார்த்த விரோத பாக்டீரியாக்கள்
மகா கலைஞனின் தத்துவமும் புளித்துபோனவை என்றன
மகா கலைஞனின் இலக்கிய விரோத பாக்டீரியாக்கள்
மகா கலைஞனின் சொற்களும்
புளித்தவையே என்றன
மகா கலைஞனின் ஆதரவு பாக்டீரியாக்கள்
மககலைஞனின் எதிர்ப்பு பாக்டீரியாக்களை
கடித்துத் துப்ப முயன்றன
நடு நிலை பாக்டீரியாக்கள்
எந்தப்பக்கம் போவது என்றும் தெரியாமல்
குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன

புளித்த மாவிலிருந்து கிளம்பிய பாக்டீரியாக்கள்
டினோனஸர்களாக மாறி
ஊரைச்சூறையாடக்கண்ட மகா கலைஞன்
மனமுடைந்துபோனான்
ராப்பபகலாய் பாக்டீரியாக்களின்
உறுமல்களில் அவனால் தூங்க முடியவில்லை

அரசு மருத்துவமனையின்
பச்சை நிறப்படுக்கையொன்றில்
பாதுபாப்பாக ஒளிந்துகொண்டபோதுதான்
புளித்த மாவின் பாக்டீரியாக்களைவிட
மருத்துவமனையின் நிஜ பாக்டீரியாக்கள்
எவ்வளவு பயங்கரமானவை
என்பதை உணரத் தொடங்கினான்

ஒரு புனிதக் கலைஞனின்மீது
ஒரு புனித எழுத்தின்மீது
ஒரு பாக்கெட் புளித்தமாவு கொட்டினால்
எல்லாமே எவ்வளவு புளிப்பாகிவிடும் என்பதை
வரலாறு பதிவு செய்துகொண்டது

மாவீரன் நெப்போலியனை
வைரஸ் காய்ச்சல் ஒன்று வென்றதைப்போல
மகா கலைஞனின் உன்னதங்களை
புளித்த மாவின் பாக்டீரியா ஒன்று
வேட்டையாடிக்கொண்டிக்கிறது

பார்வதிபுரம் காவலர்
புலனாய்கின்றார்

இவ்வாறு மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+