டெல்லியில் வைக்கப்படும் செக்.. மாரிதாஸை விடாத "கேஸ்".. உச்ச நீதிமன்ற படியேறிய தமிழக அரசு.. ட்விஸ்ட்
சென்னை: முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது தமிழகம் காஷ்மீர் ஆக மாறி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மாரிதாஸ் என்பவருக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ் பல்வேறு அவமதிப்பு புகார்கள், வதந்திகளை பரப்பியதாக வழக்குகள் உள்ளன. முக்கியமாக முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்தின் போது தமிழ்நாடு குறித்து தவறுதலாக ட்விட் செய்ததாக புகார் வைக்கப்பட்டது.
அதில் தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை மாநகரக் காவல் துறையில் புகார் அளித்தார்.

விடுதலை
யூடியூபர் மாரிதாஸ் மீதான இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் ரத்து செய்தார். மாரிதாஸ் செய்த ட்விட்டில் எந்த தவறும் இல்லை என்று கூறி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அரசுக்கு முக்கிய கேள்விகளை எழுப்பி இருந்தார். அதில், பிபின் ராவத் மரணம் குறித்து கேள்வி எழுப்பிய சுப்பிரமணிய சாமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா
அவரும் இதில் கருத்து தெரிவித்தாரே. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின்போது நிறைய சந்தேங்கள் எழுந்ததே. அப்போது சிலர் இது கொலையாக இருக்கலாம் என்று கேள்வி எழுப்பினார்களே, அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதன் பின்பே இந்த வழக்கில் மாரிதாஸ் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை
இந்த வழக்கில் தமிழ்நாடு போலீஸ் தரப்பு முன்பு வைத்த வாதத்தில், எந்த அடிப்படையில் இந்தக் கருத்தைப் பதிவுசெய்தார் என விசாரிக்க வேண்டியுள்ளது. மாரிதாஸை பலர் பின் தொடர்கிறார்கள். அவர் இப்படி போஸ்ட் செய்தால் அது தவறாக இருக்கும் என்று வாதம் வைத்தனர். இவர் மாநிலத்தின் நேர்மை குறித்தே கேள்வியெழுப்பியுள்ளார் என்று கடுமையாக வாதம் வைத்தது. ஆனாலும் இந்த வழக்கில் மாரிதாஸ் விடுதலை செய்யப்பட்டார்.

மேல்முறையீடு
இந்த நிலையில்தான் மாரிதாஸுக்கு எதிரான இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது தமிழகம் காஷ்மீர் ஆக மாறி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் மாரிதாஸ் பேசி உள்ளார் என்று கூறி மேல்முறையீடு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications