என்னய்யா சினிமா சினிமான்னு! பேசாம வேலையை பார்ப்பீங்களா! மாரிமுத்துவை திட்டிய மாமனார்!
சென்னை: குணச்சித்திர நடிகர் மாரிமுத்துவின் மறைவு தமிழக மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் குறித்த யாரும் அறியாத தகவல்கள் பல வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் பொறியியல் முடித்துவிட்டு சினிமாவுக்கு செல்வதாக கூறிய மாரிமுத்துவை அவரது குடும்பத்தினர் வேண்டாம் என தடுத்திருக்கின்றனர். குறிப்பாக அவரது தாய்மாமா அதாவது மாரிமுத்துவின் மாமனார் ''என்னய்யா சினிமா சினிமான்னு, பேசாம வேலையை பார்ப்பீங்களா'' என்று கூட திட்டியிருக்கிறார்.

இதனால் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இரவோடு இரவாக சென்னைக்கு புறப்பட்டு வந்துவிட்ட மாரிமுத்து, வைரமுத்துவிடம் உதவியாளராக சேர்ந்துகொண்டார். அதேபோல் திருமணம் என்று செய்தால் தனது மாமா மகளை தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்து மாமன் மகளையே மணம் முடித்தார் மாரிமுத்து.
தனது திருமண விழா குறித்து மாரிமுத்து அளித்துள்ள பேட்டி ஒன்றில், திருமணத்தன்று மணமகன் அறையில் சட்டை அணிந்தபோது கையை உயர்த்திய போது மின் விசிறியில் கை பட்டு வலியில் துடித்துப் போனதாகவும் அந்த வலியோடு தான் தாலி கட்டினேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தன்னை திருமணம் செய்துகொண்டால் மதுரையிலோ, உசிலம்பட்டியிலோ ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு குடியேறலாம், மாத ஊதியத்தில் குடும்பம் நடத்தலாம் என்று தனது மனைவி திருமணத்திற்கு முன்பு நினைத்ததாகவும் ஆனால் தாமோ சினிமா போகிறேன் என்று சொன்னதும் அவர் ஆரம்பத்தில் திகைத்துவிட்டார் எனவும் மாரிமுத்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications