தனக்கு வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக்கொண்ட மாரிமுத்து.. பரவும் போட்டோ!
சென்னை: மறைந்த நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்த படத்தில் தனக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் முன் நின்று அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து இன்று காலை 'எதிர்நீச்சல்' சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்து மருத்துவமனைக்குக் கிளம்பிய நிலையில், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. மாரிமுத்துவின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அண்மையில் வெளியான ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' படத்திலும் நடித்திருந்தார் மாரிமுத்து. குறிப்பாக சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் 'கங்குவா' திரைப்படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் மாரிமுத்து நடித்துள்ளார். மேலும், பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்ததாக கூறப்படுகிறது.
பகவான் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் மாரிமுத்து நடித்த 'விழா நாயகன்' படத்தின் ஷூட்டிங்கில் தான் மாரிமுத்து கடைசியாக கலந்துகொண்டாராம். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் தன்னுடைய புகைப்படம் அடங்கிய கண்ணீர் அஞ்சலி பேனர் முன்பாக செல்பி எடுத்தபடி நிற்கிறார் மாரிமுத்து.
'இமயம் சரிந்தது' எனக் குறிப்பிட்டு அவரது புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி பேனர் வைக்கப்பட்டுள்ளது. 'விழா நாயகன்' படத்தில் வரும் காட்சிக்காக அமைக்கப்பட்ட இந்த பேனர் முன் தான் மாரிமுத்து செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இறக்கும் முன்னரே தன்னுடைய புகைப்படம் அடங்கிய 'கண்ணீர் அஞ்சலி' பேனர் முன்பு நடிகர் மாரிமுத்து நின்று செல்ஃபி எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், படத்துக்காக வைத்தது இப்படி நிஜத்திலேயே நடந்துவிட்டதே என வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications