இதென்னங்க மெரினாவுக்கு வந்த சோதனை.. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மழைக்கே இப்படியா- வீடியோ!
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வருவதால் மெரினா கடற்கரையில் மணல் பரப்பு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரு தினங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஏற்கெனவே பிப்ரவரி, செப்டம்பர் மாதம் பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பிவிட்டன.
இந்த நிலையில் இந்த கனமழையால் நீர் நிலைகளை திறந்துவிடும் நிலை ஏற்பட்டது. இதனால் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகள் திறக்கப்பட்டன. அது மட்டுமல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் திறக்கப்பட்டன.

வெள்ளம்
இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. சென்னையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் ஒரே நாளில் 20 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வெள்ளம் வராது என நினைத்த பகுதிகளில் எல்லாம் முழங்கால் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பூச்சிகள்
இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வழியின்றி தவித்து வருகிறார்கள். மழை நீருக்கு நடுவே பாம்பு, தேள், உள்ளிட்ட பூச்சிகளின் அச்சுறுத்தலும் இருந்து வருகிறது. ஏற்கெனவே ஏரிகள், ஆறுகள் எல்லாம் கடல் போல காட்சி அளித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மணல் பரப்பில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
|
தண்ணீர் தேக்கம்
அது பார்ப்பதற்கு குட்டி கடல் போல் காணப்படுகிறது. இந்த மழைக்கே இப்படி தண்ணீர் தேங்கியுள்ளது என்றால் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்று புயலாக மாறினால் எத்தனை அளவுக்கு தண்ணீர் இருக்கும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடலும் கொந்தளிப்பாக காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video

தண்ணீர் வடியவில்லை
மெரினா கடற்கரையில் கடைகளை வைத்திருக்கும் நபர்கள் கடைகளில் உள்ள பொருட்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். இன்றும் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. ஒரு பக்கம் சில பகுதிகளில் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்தாலும் மேலும் மேலும் மழையால் தண்ணீர் வடிந்த பாடில்லை.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications