சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெரினா பீச்சில் 3 ஆண்ட்டிகள்.. கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் நடுவில் நடந்த அட்ராசிட்டி.. ஏன்?

மெரினா பீச்சில் சாராயம் விற்றதாக 3 பெண்கள் கைதாகி உள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: மெரினா பீச்சில் 3 பெண்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.. இவர்களை வைத்து மேலும் சிலருக்கு வலை வீசப்பட்டுள்ளது.. இதற்கு பின்னணி காரணம் என்ன?

பொதுவாக மெரினா பீச் மணலில், மதுபாட்டில்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கும்.. ஆனால், இங்குள்ள கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் நடுவில் சாராய பிசினஸே நடந்துள்ள விவகாரம் தற்போதுதான் தெரிய வந்துள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பிச்சு எடுக்கும்.. இன்று எங்கெல்லாம் பெய்யும்? ரிப்போர்ட் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பிச்சு எடுக்கும்.. இன்று எங்கெல்லாம் பெய்யும்? ரிப்போர்ட்

சின்ன சின்ன பாட்டில்களில் சாராயத்தை அடைத்து, 50 ரூபாய், 100 ரூபாய் என்று விற்று வந்துள்ளனர்.. இதனால், இந்த பகுதிகளில் மட்டும் ஆள்நடமாட்டம் அதிகமாகவே இருந்துள்ளது.. இதற்கு பிறகுதான் போலீசுக்கு சாராய பாட்டில்கள் விற்கப்படும் தகவல் தெரிந்தது.

ரகசியம்

ரகசியம்

இதையடுத்து மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார், ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்தனர்.. அப்போதுதான், 3 பெண்கள் சாராயம் விற்பதை கண்டனர்.. அவர்கள் 3 பேருமே மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.. பின்னர், 3 பெண்களையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்து விசாரித்தனர்.. அவர்கள் பெயர் ஜென்தூஸ் கோஸ்லயா, சில்பா போஸ்லே, சுனந்தா என்பதாகும்.. அவர்களிடம் இருந்த 32 லிட்டர் சாராய பாட்டில்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சாராயம்

சாராயம்

அப்போது அவர்கள் சொன்ன தகவல் போலீசாரையே மிரள வைத்துவிட்டது.. ஆந்திராவில் இருந்து சாராயங்களை மொத்தமாக வாங்கி, ரயிலில் கொண்டு வருகிறார்களாம்.. சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து, ஷேர் ஆட்டோக்கள் மூலம் பீச்சுக்கு கொண்டு வந்து, அங்கேயே மறைத்து வைத்து, பாட்டிலில் ஊற்றி வியாபாரம் செய்வதாக கூறியுள்ளனர். இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், 100 லிட்டர் சாராயம் பீச் மண்ணில் புதைத்து வைத்திருக்கிறார்களாம்.

 கண்ணகி சிலை

கண்ணகி சிலை

இதையடுத்து, அவர்கள் சொன்ன நேதாஜி சிலைக்கும், கண்ணகி சிலைக்கும் இடையே, போலீசார் சென்று, ஜேசிபி இயந்திரங்களை வைத்து பீச்சில், தோண்ட ஆரம்பித்தனர்.. அப்போது 2 லிட்டர் பாட்டில்களில் சாராயங்கள் தோண்ட தோண்ட வந்து கொண்டே இருந்தது.. பிறகு, இதேபோல வேறெங்காவது சாராயத்தை புதைத்து வைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்தது..

 வினோத் கைது

வினோத் கைது

அதனால், சாராய வழக்கில் கைதான விஷால் வினோத் பவார் என்பவரை விசாரித்தனர்.. அந்த நபரும், ஆந்திராவிலிருந்து சாராயத்தை பீச்சுக்கு கொண்டு மணலில் வேறு இடத்தில் புதைத்திருப்பதாக சொன்னார்.. உடனே அங்கேயும் சென்று தோண்டி பார்த்து, அந்த சாராய பாட்டில்களை எடுத்தனர் போலீசார்... தண்ணீர் பாட்டில்களில் இந்த சாராயத்தை அடைத்து வைத்திருந்தனர்.. அவைகளை எல்லாம் பக்கெட்களில் ஊற்றி கொண்டு போனார்கள்.. விஷால் வினோத்திடம் தொடர் விசாரணை நடக்கிறது..

சப்ளை

சப்ளை

ஆந்திராவில் இருந்து இவர்களுக்கெல்லாம் யார் சப்ளை செய்வது? பீச்சில் வேறு யாரெல்லாம் சாராயத்தை மண்ணில் புதைத்து வைத்துள்ளனர் என்பது குறித்த விசாரணைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.. இந்த விவகாரம் சென்னை மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. புகழ் பெற்ற மெரினா கடற்கரையை போதைப் பொருட்களின் மையமாக மாற்றியுள்ள திமுக அரசிற்கு கண்டனம் தெரிவிப்பதாக ஓபிஎஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்..!

English summary
marina beach issue and how did chennai police arrest three women மெரினா பீச்சில் சாராய விற்றதாக 3 பெண்கள் கைதாகி உள்ளனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X