கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வரலாற்றில் முதல்முறை! மலர்ந்த காதல்! நடந்த திருமணம்! வாழ்த்திய அமைச்சர்கள்
சென்னை : கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் 225 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, அங்கேயே சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன் - தீபா ஆகியோரின் திருமணம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில் நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சேகர் பாபு, எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் சுமார் 220 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. கீழ்பாக்கம் என்றாலே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடம் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதைய சூழலில் இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் மனநல பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி மகேந்திரன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டு உறவினர்களால் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல வேலூரைச் சேர்ந்த ஆசிரியர் தீபா என்பவர் தனது தந்தை இறந்ததால் சோகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டு இங்கே சிகிச்சை பெற்று வந்தார்.

கீழ்பாக்கம் மனநல காப்பகம்
அவர்களுக்கு மருத்துவமனையில் கவுன்சிலிங் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மற்றவர்களை விட இருவரும் விரைவில் குணமடைந்தனர். தற்போது மகேந்திரன் மனநல காப்பகத்தில் பராமரிப்பாளராகவும் தீபா கிச்சனிலும் பணியாற்றி வரும் நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டதால் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் இது குறித்த விபரம் மனநல காப்பக இயக்குனர் பூர்ண சந்திரிகா கவனத்திற்கு சென்றடைய, இருவரும் நாங்கள் குணமடைந்த நிலையில் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறோம் எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் எனக் கேட்டுள்ளார். இதை அடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக அவர் உறுதியளித்த நிலையில் இன்று திருமணம் நடைபெற்றது

மனநல காப்பகத்தில் பூத்த காதல்
கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் 225 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, அங்கேயே சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன் - தீபா ஆகியோரின் திருமணம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற நிலையில் சமூக வலைதளங்களில் தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன் - தீபா ஆகியோருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

விருந்தினர்கள்
திருமணம் நடைபெற்ற மகேந்திரன் மற்றும் தீபா இரண்டு பேரும் பட்டதாரிகள். அதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையிலேயே அவர்கள் இரண்டு பேருக்கும் வார்டு மேற்பார்வையாளராக பணி வழங்கி அந்த பணி நியமன ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இருவரிடமும் வழங்கினார்.

மகிழ்ச்சியான நிகழ்ச்சி
அதனை தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தினந்தோறும் ஆறேழு திருமணங்களுக்கு செல்வேன், இதுவரை மிகவும் மகிழ்வுடன் கலந்து கொண்ட திருமணம், ஜிப்ஸி இன நரிக்குறவ மக்களின் திருமண நிகழ்வாகும், அதற்கடுத்து இந்த கல்யாணம் தான் என்ற அவர், இந்த திருமணத்தில் நான் கலந்து கொண்டது என் வாழ்நாளின் அரும்பெரு பேருகளில் ஒன்று எனவும் திருமண விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றி திருமணம் நடைபெற்றுள்ளது என்றார். மேலும், அழையா விருந்தாளியாக இந்த திருமணத்திற்கு நான் வந்து இருக்கிறேன் என்றார்.

இப்படி திருமணம் நடந்திருக்காது
அதனை தொடர்ந்து மேடையில் பேசிய மணமகன் மகேந்திரன் மற்றும் மணமகள் தீபா, எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைத்திருந்தால் கூட இப்படி நடத்தி வைத்திருக்க மாட்டார்கள். எங்கள் திருமணம் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் வேலை வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி என தெரிவித்தனர். அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
திண்டுக்கல்லில் கல்யாண மண்டபத்தில் ஓடிப்போன மணமக்கள்.. ஒரு போன் காலால் ட்விஸ்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications