கன்னியாகுமரியிலும் ஒரு "சஞ்சீவி மலை".. காற்றில் கலந்த மூலிகைகள்! அரிய தகவல்களுடன் மருந்து வாழ் மலை!
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்து வாழ் மலையில் மருத்துவக் குணம் கொண்ட மூலிகைகள் உள்ளன.
இந்த மருந்து வாழ் மலைக்கு மருந்து வாழும் மலை, மருந்து வா மலை உள்ளிட்ட பெயர்கள் உள்ளன. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ந்து மலையின் தென் பகுதியில் அகஸ்தீஸ்வரம் தாலுக்காவில் உள்ளது.
தென் கேரளாவில் வாழும் மக்கள் இந்த மலையை மருத்துவ மலா என அழைக்கிறார்கள். இந்த மலைக்கென ஒரு வரலாறு இருக்கிறது.

ராமாயணம்
ராமாயணத்தில் ராவணனை எதிர்த்து போரிட்ட போது லட்சுமணன் காயமடைந்து விடுவார். அவரது காயத்தை குணப்படுத்துவதற்காக மகேந்திரகிரியிலிருந்து இலங்கைக்கு ஹனுமன் சஞ்சீவி மூலிகை கொண்ட மலையை பெயர்த்து சுமந்து செல்வார். அப்போது அதிலிருந்து ஒரு துண்டு இந்த இடத்தில் விழுந்ததாக சொல்லப்படுகிறது.

மருத்துவ மலை
அந்த துண்டே தற்போது மருத்துவ மலையாக காட்சியளிப்பதாக சொல்கிறது ஐதீகம். இந்த மலையின் உயர்ந்த முகட்டில் பாறை வெடிப்புக்குள் பிள்ளைத் தடம் எனும் குகை உள்ளது. இந்த மலையின் குகையில் தவம் செய்தவர் பலர் ஸ்ரீநாராயண குருவும் தவமிருந்ததாக கூறப்படுகிறது.

ஆதாரங்கள்
இதற்குரிய ஆதாரங்கள் இல்லை. இது ஒரு கிலோட்டர் பரந்தும் 800 அடி உயரத்திலும் உள்ளது. இந்த மலையில் அய்யா வைகுண்டர் தங்கியிருந்து தவம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. கார்த்திகை தீபத்தின் போது இந்த மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் இருந்து பார்த்தால் இந்திய துணை கண்டனத்தின் வி வடிவில் உள்ள பகுதியை காண முடியும்.

முக்கடல்கள்
அது போல் வங்கக் கடல், இந்திய பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்களும் நீல நிறத்தின் பல்வேறு சாயல்களில் இருப்பதை காணலாம், அது போல் தென்னை மரத்தின் நிறங்களும் பல சாயல்களை கொண்ட பச்சை நிறத்தில் இருப்பதையும் காணலாம். புராணங்களும் இந்த மலையை பற்றியும் மலையின் சிறப்புகளையும் அங்கு வாழும் சித்தர்களை பற்றியும் கூறுகிறது.

காற்றில் கலந்த மூலிகைகள்
உயிரை காக்கும் அனைத்து மூலிகைகளின் மருத்துவ குணமும் காற்றில் கலந்துள்ளது. இந்த மலையில் சிவ, அகஸ்திய , ராம, சீதா, ஹனுமன், பாலாறு, தேவேந்திரன், பிரம்மா, காளிதாசா என 9 தீர்த்தங்கள் உள்ளன. இந்த மலையில் உள்ள காடுகளில் சிறுத்தைகள், விஷம் கொண்ட பாம்புகள், மலைப் பாம்புகள் ஆகியவை காணப்படுகின்றன.
-
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications