ஓயாமல் ஸ்டாலினை சீண்டிய எடப்பாடி.."யாரு எங்க முதல்வரா?"..வரிந்து கட்டி வந்த சக்ரபாணி.. என்ன நடந்தது?
எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டுறவு துறை அமைச்சர் சக்கரபாணி பதிலடி தந்துள்ளார்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் ஒரு விளம்பர பிரியர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்ததற்கு, அமைச்சர் சக்கரபாணி பதிலடி தந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கும், திமுக அமைச்சர் சக்கரபாணிக்கும் கருத்து மோதல்கள் அடிக்கடி வெடிக்கும்.. பொங்கல் தொகுப்பு திட்டத்தில் 500 கோடி ஊழல் என்றும், தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி அன்று முதல் முதலாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு ஆதாரங்களுடன் விளக்கி அன்றைய தினமே பதிலளித்திருந்தார் தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி..
அதேபோல கடந்த மாதம்கூட, திமுக ஆட்சியில் சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி புழுத்துப்போய் வீணாகி விட்டதாக மத்திய அரசின் இந்திய உணவு கழகம் ஆதாரத்துடன் குற்றம் சாட்டி உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

நீங்களே பாருங்க
இதற்கும் பதில் அளித்த சக்கரபாணி, "இந்திய உணவுக் கழகத்திடமிருந்து வந்த கடித நகலை உங்களுக்குத் தருகிறேன்.. அதில் என்ன சொல்லியிருக்கிறது என்று நீங்களே படிச்சு பாருங்க" என்று செய்தியாளர்களிடம் புள்ளிவிவர தகவலை தந்திருந்தார்.. இப்போது மீண்டும் ஒரு குற்றச்சாட்டை எடப்பாடி தெரிவித்துள்ளார்.. நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.. இதற்கும் சக்கரபாணி இன்று பதிலளித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவுத்துறை, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. அமைச்சர் சக்ரபாணி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் நியாய விலை கடை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி
ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்ரபாணி, "திமுக அரசு அமைந்த பின்னர் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தால் 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது.. இதுவரை 12 லட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.. 2.5 லட்சம் குடும்ப அட்டை நீக்கபட்டுள்ளன.. மழை காலம் துவங்கி உள்ள நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, இடம் குறிப்பிடாமல் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.. அவர் அப்படி சொல்வது முற்றிலும் தவறானது...

எடப்பாடி படம்
உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.. தவறான செய்திகளை கூறுவது, எடப்பாடி பழனிசாமி வகிக்கின்ற பதவிக்கு அழகல்ல. ஸ்டாலின் ஒரு விளம்பர பிரியர் என்று தமிழக முதல்வரை எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறார்... கடந்த ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட பள்ளி பைகளை எடப்பாடி பழனிசாமி படம் பொறிக்கப்பட்ட பைகளை வழங்க உத்தரவிட்டவர்.. எங்கள் முதல்வருக்கு விளம்பரம் தேவை இல்லை.. நாங்களே விளம்பரம், கொடுக்க விரும்பினாலும், கால் பக்க விளம்பரம் கொடுக்க சொல்லுவார் முதல்வர்.. தனியார் பங்களிப்புடன் 12 புதிய அரிசி ஆலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது...

ஸ்டிரிக்ட் ஆக்ஷன்
குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருப்பது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பொருட்கள் கடத்தலை தவிர்க்க திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் 3 இடங்களில் ரோந்து வாகனங்கள் மற்றும் 50 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றார்.. ரேசன் அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்" என்றார் அமைச்சர் சக்கரபாணி.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications