Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ANNA: இன்று முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்.. தமிழக கட்சிகள், தொண்டர்கள் கொண்டாட்டம்

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிடர் முன்னேற்ற கழகம் என்ற விதையை முதன்முதலில் விதைத்த சி.என்.அண்ணாதுரையின் 114-வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படும் சி.என். அண்ணாதுரை கடந்த 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதியன்று, நடராஜன் - பங்காரு அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

நடுத்தர வர்க குடும்பத்தில் பிறந்த அவர், காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் ஆரம்ப கல்வி கற்றார்... பிறகு உயர் கல்விக்காக சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். முதலில் பி.ஏ.(ஹானர்ஸ்) பட்டம் பெற்ற அவர் பொருளாதாரத்திலும், அரசியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

 பொதுச்செயலாளர்

பொதுச்செயலாளர்

தமிழ் மொழியில் மிகுந்த புலமை பெற்றவர் என்பதால் அவர் "அறிஞர் அண்ணா" என்று அன்போடு அழைக்கப்பட்டார்.. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் பொதுச் செயலாளர் மட்டுமின்றி, முதன்முதலாக வந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் முதல்வரும் ஆவார். தன் இளம் வயதிலேயே அரசியல் ஆர்வம் கொண்ட அவர் பெரியாரின் திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து விலகிய அண்ணா, 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதியன்று சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.

கின்னஸ்

கின்னஸ்

இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராக பணியாற்றிய அண்ணாதுரை 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு "கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்" இடம் பெற்றுள்ளது. இவ்வாறாக திராவிடத்துக்கும், தமிழகத்துக்கும் அளப்பரிய பணியாற்றிய முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை மாநிலம் முழுவதும் திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

 காலை சிற்றுண்டி

காலை சிற்றுண்டி

தமிழக அரசு சார்பில், பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.. மேலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் இன்று முதல்வர் அறிமுகம் செய்து வைக்கிறார்.. அதேபோல, அதிமுக, அமமுக உள்ளிட்ட அனைத்து தமிழக கட்சிகளின் சார்பிலும் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

பதக்கங்கள்

பதக்கங்கள்

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதல்வர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 சமூக சிந்தனை

சமூக சிந்தனை

அதேபோல, தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், "நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ண முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்" என அறிவிப்பு வெளியானது.

 முதல் பரிசு

முதல் பரிசு

அந்த வகையில், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு 15, 17 ஆகிய இரண்டு நாட்களில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே சென்னையில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளதால், ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.. இந்தப் போட்டியில் முதல் பரிசாக ரூ.5,000-மும் , இரண்டாவது பரிசாக ரூ.3,000-மும், மூன்றாவது பரிசாக ரூ.2,000-மும் வழங்கப்படும் என்றும், போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பரிசாக இரண்டு பேருக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என்றும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 சைக்கிள் போட்டி

சைக்கிள் போட்டி

அதேபோல, அண்ணா பிறந்தநாளில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் போட்டிகள் வருடந்தோறும் நடத்தப்படுவது வழக்கம்.. அந்தவகையில், சைக்கிள் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.. அந்தவகையில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், தமிழகமே திரண்டு கொண்டாடி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+