தமிழக பள்ளிகள் திறக்க 1 நாளே உள்ள நிலையில்.. வந்து விழுந்த அதிரடி அறிவிப்பு.. குஷியில் குடும்பங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் நாளை திறக்க உள்ள நிலையில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்டு உள்ளது.

கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 7ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு தற்போது மேலும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Mass announcement for students and families ahead of Schools reopening in Tamil Nadu

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக பள்ளிகள் 7ம் தேதி திறப்பதாக இருந்தது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடன் ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடலாமா என்று ஆலோசனை செய்தார்.

தள்ளி வைக்கப்பட்டது ஏன்? : கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி கல்வித்துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். அதன்பின் முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு உடன் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனைக்கு பின் பள்ளிகளை திறக்க இரண்டு தேதிகளை தேர்வு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் அறிவித்தார்.

பேருந்துகள் இயக்கம் : தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் கடந்த வாரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி பல்வேறு பகுதிகளுக்கு இடையில் சிறப்பு பேருந்து சேவை வழங்கப்பட்டது. கடந்த 5-6 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, வேதாரண்யம், காரைக்குடி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் பகுதியில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.

அதேபோல் சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, வேதாரண்யம், காரைக்குடி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கு திருச்சியில் இருந்தும்.. இதே பகுதிகளில் இருந்து திருச்சிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 4 மற்றும் 5ஆம் தேதி இந்த பேருந்துகள் இயக்கப்பட்டன.

முக்கிய உத்தரவு: இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தற்போது மேலும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் கோடை விடுமுறைக்கு சென்ற மாணவ, மாணவியர் வீடு திரும்பும் வகையில் இன்றில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன

முக்கியமாக பெற்றோர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக இருக்கும் என்பதால் இன்றில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்றும் நாளையும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இறுதி நாட்களில் சென்னைக்கு 650 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னைக்கு கோவை, மதுரை, பெங்களூரு, நெல்லை, திருச்சி, சேலம் பகுதிகளில் இருந்து 850 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் சென்னையில் இருந்து இதே நகரங்களுக்கு எதர் திசையில் 850 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் 1,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+