எப்போ Layoff மெயில் வரும்னே தெரியாது! ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கும் நிறுவனங்கள்? என்ன தான் தீர்வு?
சென்னை: கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய ஐடி ஜாம்பவான் நிறுவனங்கள் தொடங்கி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் வரை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ளன. ஏஐ தாக்கம் தொடர்பாக ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை எப்படி சமாளிப்பது என்பது தான் தற்போதைய டெக் பணியாளர்களின் கேள்வி.
இந்தியாவின் முக்கிய தொழில் துறைகளில் ஒன்றாக விளங்குவது தகவல் தொழில்நுட்பம் (ஐடி). உலகின் முன்னணி மென்பொருள் சேவைகள் மற்றும் ப்ராஜெக்ட்களை இந்திய நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்தத் துறையில் தற்போது ஒரு அதிர்ச்சி நிலை உருவாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணி நீக்கங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

ஐடி பணி நீக்கம்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இதுவரை 2,500க்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களையும், இன்ஃபோசிஸ் புதிய நியமனங்களை தள்ளிப் போட்டுள்ளதோடு, சுமார் 1,000க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்துள்ளது. இதேபோல், விப்ரோ - 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள், டெக் மகிந்திரா - 1,500 பேர் என குறைந்த கால இடைவெளியில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய ஐடி ஜெயன்ட்களான, கூகுள், மெட்டா, அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்றவை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேல் உலகளாவிய பணி நீக்கங்களை செய்துள்ளன. இதில் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெக் வேலைவாய்ப்பு
உலக பொருளாதார மந்தநிலை காரணமாக, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற முக்கிய சந்தைகளில் புதிய ப்ராஜெக்ட்கள் குறைந்துவிட்டன. ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி காரணமாக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் பணி தேவையற்றதாக மாறியுள்ளது. சில நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் வகையில் ஊழியர்களைக் குறைக்கும் முடிவை எடுத்து வருகின்றன.
ஊழியர்களுக்கு நெருக்கடி
கோவிட் காலத்தில் அதிகப்படியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது அதே அளவு தேவையில்லை என்பதால் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. எனவே இனியும் ஆபத்து இருக்கிறதா என்றால் ஆமாம் என்பதுதான் உண்மை. 2025 ஆண்டின் இறுதிப் பகுதி வரை பணி நீக்கங்கள் தொடரும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக, புதிய ப்ராஜெக்ட்கள் குறைந்திருப்பதும், உலகளாவிய சந்தையில் நிலையான வளர்ச்சி இல்லாததும் காரணமாக இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
திறன் மேம்பாடு
ஏஐ, டேட்டா சயன்ஸ், சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் திறமையை வளர்த்துக்கொள்வதுதான் பணி நீக்க ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வழி. - BPO சேவை தொடர்பான துறைகள் பணிநீக்க ஆபத்தில் இருக்கின்றன. எனவே அங்கு பணியாற்றுபவர்கள், புதிய டெக்னாலஜிகளுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஃப்ரீலான்ஸ் மற்றும் ஸ்டார்ட்அப் வாய்ப்புகளை தேடுவதோடு, நிதி திட்டமிடல், சேமிப்பு ஆகியவை கடைசி நேரத்தில் கைகொடுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேலை பாதுகாப்பு
ஐடி துறையின் பணி நீக்கங்கள் பல இளைஞர்களின் வாழ்க்கையைப் பாதித்துள்ளது உண்மைதான். ஆனால் அதே சமயம், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் முனைப்பும், திறன்களை மேம்படுத்தும் ஆர்வமும் இருந்தால், அடுத்த கட்ட வேலை வாய்ப்புகளை எளிதாகப் பெறலாம். உலக தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுவதுபோல், பணி நீக்கங்களைக் கண்டு அஞ்சாமல், எதிர்கால தொழில்நுட்ப வாய்ப்புகளுக்குத் தயாராக இருப்பதே சரியான தீர்வு என்கின்றனர் மனிதவள நிபுணர்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications