அன்னியூர் சிவா எம்எல்ஏ-வாக இன்று பதவியேற்பு.. விக்கிரவாண்டியின் சரித்திர வெற்றியால் திமுக மகிழ்ச்சி
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று எம்எல்ஏவாக பதவியேற்கிறார்.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவான புகழேந்தி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, மயங்கி விழுந்து காலமானார். எனவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

எனவே, இந்த தொகுதியில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி ஏற்படும் என்று சொல்லப்பட்டது. அதேசமயம், பாமக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் போன்றவை போட்டியிடும் என்பதால், 5 முனை போட்டி ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டது.
ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா, பாமகவின் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் அபிநயா ஆகியோர் மட்டும் களம் கண்டனர். ஆனால், அதிமுகவும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் பங்கேற்காமல் புறக்கணித்தன...
பிரச்சாரம்: இதில் திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் பிரச்சாரங்களை கையில் எடுத்தன.. குறிப்பாக கள்ளச்சாராய மரண விவகாரமானது, விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் அதிகமாகவே எதிரொலித்தது.. அத்துடன், சட்டம் - ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. எனினும், திமுகவே அபார வெற்றி பெற்றது.
கடந்த 10-ந் தேதி இந்த தேர்தலின் வாக்குப்பதிவின்போது, தபால் வாக்குகள் தொடங்கி 20-வது சுற்று வரை தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தபடியே இருந்தார்.. இறுதியில், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணியை விட சுமார் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார் அன்னியூர் சிவா.
வெற்றி சான்றிதழ்: இந்த வெற்றியையடுத்து, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், வெற்றிச்சான்றிதழை அன்னியூர் சிவாவுக்கு, வழங்கினார். இந்த வெற்றியின் மூலம் ஆளும்கட்சியான தி.மு.க., விக்கிரவாண்டி தொகுதியை மீண்டும் தன்வசப்படுத்தியது.
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் திமுக மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. அதுமட்டுமல்ல, விக்கிரவாண்டி தொகுதியில் ஏற்கனவே வென்ற கட்சியின் வேட்பாளர், மறுபடியும் வெற்றி பெறுவதும் இதுதான் முதல் முறை.
அபார வெற்றி: எனவே, திமுகவும், கூட்டணி கட்சியினரும் இந்த வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அதேபோல, அகில இந்திய அளவில் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், 10 இடங்களில் இந்தியா கூட்டணியும், ஒரு சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளதை கூட்டணி கட்சிகள் பெருமிதமாக தெரிவித்து வருகின்றன.
ஆக மொத்தம், கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என எதுவும் திமுகவுக்கு எதிரான வாக்குகளாக விக்கிரவாண்டியில் மாறவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவு பறைசாற்றியிருக்கிறது.
இன்று பதவியேற்பு: இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணி அளவில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் எல்எல்ஏவாக பதவி ஏற்கவுள்ளார். இதனால் திமுகவினர் மிகுந்த குஷியில் உள்ளனர்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications