தங்கம் வெளியிட்ட தங்கமான அறிவிப்பு.. உங்க வீட்டில் இபி கனெக்சன் இருக்கா.. அப்போ முதலில் இதை படிங்க
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்து முக்கியமான நல்ல செய்திகளை சொல்லி இருக்கிறார். சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க விரைவில் ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பொருத்தப்படும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின் மாதம் மாதம் மின் கட்டணம் வசூலிக்கப்படும். 2 மாத நடைமுறை கைவிடப்படும்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக அபராதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை . அதனால் பொறுத்த முடியாமல் போகும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. இரவு நேரங்களில் 20 சதவிகிதம் கூடுதல் மின்சார கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசு திட்டத்திற்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு: இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி வரும் 24ம் தேதி தமிழ்நாடு முழுக்க இபி நிலையங்களில் இதற்காக முகாம் நடத்த வேண்டும்.
இபி இணைப்புகளில் பெயர் மாற்றம் வேறு மாற்றங்களை செய்ய விரும்பும் மக்கள் இந்த நாளில் இலவசமாக செய்யலாம். இந்த பணிகளை அதிகாரிகள் முறையாக செய்ய வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார். அதேபோல் மாநிலம் முழுக்க மின்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சீரான மின்விநியோகம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறினார். எங்கெல்லாம் மின் கம்பங்கள் சரியாக இல்லையோ அங்கெல்லாம் உடனே கம்பங்களை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
விரைவில் மாற்றம்: இது போக மின்சார கட்டணம் ரூபாய் 1000 அல்லது 2000 மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதில் 1000 ரூபாயா அல்லது 2000 ரூபாயா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை., தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் இருந்தால் அதை மின்சார நிலையங்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
இனிமேல் மின்சார கட்டணம் ரூபாய் 2000க்கு மேல் வந்தால் அதை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருகின்றதாம்.மின்சார நிலையங்களில் கூடுதல் பணம் கையாள்வதை தவிர்க்கவும், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த முறையை கொண்டு வர மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளதாம்.
ஆனால் இன்னும் இந்த புதிய விதி நடைமுறைக்கு வரவில்லை. முறையான ஆலோசனைக்கு பின்பே இந்த விதி நடைமுறைக்கு வருவது பற்றி முடிவு எடுக்கப்படும். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகள் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதன் ஒரு கட்டமாக மின்சார துறையையும் டிஜிட்டல் மயமாக்க முடிவுசெய்துள்ளனர் .












Click it and Unblock the Notifications