தமிழக சட்டசபை தேர்தலில் 85% வாக்குப்பதிவு: கரூர், வீரபாண்டி தொகுதிகள் டாப்! பாளையங்கோட்டையில் குறைவு
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் இறுதி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது கடந்த 2021 சட்டசபை தேர்தலை (72.81%) விட சுமார் 12 சதவீதம் அதிகம்.
வாக்குப்பதிவு இந்த முறை கொங்கு மண்டலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகமாக நடந்துள்ளது. சேலம் மாவட்டம் வீரபாண்டி மற்றும் கரூர் ஆகிய இரு தொகுதிகளும் தலா 93.40% வாக்குகளைப் பதிவு செய்து தமிழ்நாட்டிலேயே முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. குறைந்தபட்சமாக பாளையங்கோட்டை சட்டசபை தொகுதியில் 68.97% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

கரூர்
தமிழகத்தின் அரசியல் போர்க்களமாக எப்போதும் திகழும் கரூர், இந்த முறை வாக்குப்பதிவிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கரூர் சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 79 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கரூர் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளராக ஆசி. எம். தியாகராஜன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தவெக சார்பில் மதியழகன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கரூர் தொகுதியில் நிலவும் அனல் பறக்கும் அரசியல் போட்டி மற்றும் வாக்காளர்களுக்கு இடையே நிலவும் கட்சிப் பற்று, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதத்தை உயர்த்துகிறது. அந்தவகையில் இந்த முறை கரூரில் 93.40% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
வீரபாண்டி
சேலம் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான வீரபாண்டி, கரூருடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. வீரபாண்டி தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தைச் சேர்ந்த தருண், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மனோன்மணியின் மகன் பாலாஜி சுகுமார், தவெக சார்பில் பழனிவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ்குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
பாளையங்கோட்டை
தமிழ்நாட்டிலேயே குறைந்தபட்சமாக பாளையங்கோட்டை சட்டசபை தொகுதியில் 68.97% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. பாளையங்கோட்டை சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் அப்துல் வஹாப், அதிமுக சார்பில் சையது சுல்தான் சம்சுதீன், தவெக சார்பில் மரியஜான், நாதக சார்பில் சங்கரநாராயணன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் அதிகபட்சமாக கரூரில் 92.63 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. தலைநகர் சென்னையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 83.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு
அரியலூர் - 87.41
செங்கல்பட்டு - 85.46
சென்னை - 83.74
கோயம்புத்தூர் - 84.76
கடலூர்- 85.49
தருமபுரி - 90.13
திண்டுக்கல் - 89.25
ஈரோடு - 90.10
கள்ளக்குறிச்சி - 88.50
காஞ்சிபுரம் - 87.39
கன்னியாகுமரி - 75.61
கரூர் - 92.63
கிருஷ்ணகிரி - 85.48
மதுரை -80.52
மயிலாடுதுறை - 82.14
நாகப்பட்டினம் - 86.30
நாமக்கல் - 90.21
பெரம்பலூர் - 85.50
புதுக்கோட்டை - 83.90
ராமநாதபுரம் - 77.01
ராணிப்பேட்டை - 89.89
சேலம் - 90.76
சிவகங்கை - 76.66
தென்காசி - 82.41
தஞ்சாவூர் - 80.63
நீலகிரி - 78.92
தேனி - 81.55
திருவள்ளூர் - 83.76
திருவாரூர் - 83.69
தூத்துக்குடி - 80.53
திருச்சிராப்பள்ளி - 85.44
திருநெல்வேலி - 77.94
திருப்பத்தூர் - 88.90
திருப்பூர் - 88.59
திருவண்ணாமலை - 89.66
வேலூர் - 88.76
விழுப்புரம் - 88.99
விருதுநகர் - 84.89












Click it and Unblock the Notifications