பிரபல நடிகர் "இங்கே" வருகிறாராமே.. பிளானே இதுதான்.. எடப்பாடியே எதிர்பார்க்கலை.. ஓவர் ஸ்பீடு ஓபிஎஸ்
ஓபிஎஸ் ஆதரவாக நடிகர் ஒருவர் தென்மண்டலங்களில் பிரச்சாரம் செய்ய போகிறார்
சென்னை: சசிகலா ஓபிஎஸ் டிடிவி தினகரன் இவர்கள் எப்போது இணைவார்கள் என்ற தகவல் ஒன்று அதிமுகவுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.. மற்றொருபுறம் ஓபிஎஸ் வியூகங்களை கண்டு, தென்மண்டலம் மலைத்து வருகிறது.
அதிமுக விவகாரம் அதே பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி சற்று சோர்ந்து போய் உள்ளதாகவும், பதற்றத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீர்ப்பு வந்த தினத்தன்று அப்செட்டில் இருந்த எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்கள் உள்பட யாரையுமே சந்திக்கவில்லை என்கிறார்கள்.. அவரை சந்திக்க சென்றவர்கள் கூட திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்களாம்.

விஸ்வரூபம்
பொதுக்குழு நடத்தியதில் பல சட்ட சிக்கல்களில் எடப்பாடி சிக்க உள்ள நிலையில், இன்னொரு சிக்கலும் அவருக்கு சூழ்ந்துள்ளதாம்.. அதாவது, இடைக்கால பொதுச்செயலாளார் பதவியை ஏற்பதற்கு முன்பாகவே, தன்னுடைய இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ததுதான், கட்சிக்குள் விவகாரம் விஸ்வரூபமெடுக்க காரணமாகி விட்டது.. அதுமட்டுமல்லாமல், கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி எந்த விஷயம் குறித்தும் ஆலோசிப்பதில்லை என்ற புகார் திடீரென வெடித்து கிளம்பி உள்ளது.

அசைன்மெண்ட்
கடந்த முறை சட்டசபை தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே ஆலோசனைகளை கேட்டு, தன்னிச்சையாக நடந்து கொண்டாரே தவிர, தங்களை எந்த விஷயத்திலும் மதிப்பதில்லை, அந்த போக்கு இப்போது வரை தொடர்கிறது என்று ஒருசிலர் புலம்ப ஆரம்பித்துள்ளார்களாம்.. ஏற்கனவே, தனி நீதிபதி உத்தரவில் அப்செட்டில் இருக்கும் எடப்பாடி, தங்கள் ஆதரவாளர்களே, தனக்கெதிராக பேசுவதை கேள்விப்பட்டு இன்னும் வருத்தமாகி உள்ளாராம்.. எவ்வளவு சட்ட சிக்கல்கள் இருந்தாலும், தன்னிடம் மெஜாரிட்டி உறுப்பினர்கள் உள்ளனர் என்ற ஒரே ஒரு பெருத்த நம்பிக்கையில் எடப்பாடி உள்ளபோது, அந்த நிர்வாகிகளே புலம்ப தொடங்கி உள்ளது கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

பச்சை சிக்னல்
ஆனால், ஓபிஎஸ் அப்படி இல்லை.. செம கூலாக இருக்கிறார்.. கடந்த 10 நாட்களாகவே உற்சாகத்துடனும், குஷியுடனும் வலம் வருகிறார்.. பறந்து பறந்து ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார்.. ஏகப்பட்ட பிளான்களை கையில் வைத்திருக்கிறார்.. இத்தனை நாளும் மென்று விழுங்கிக் கொண்டு, மறைமுமாக ஆதரவு தந்து கொண்டிருந்த நிலையில், இன்று வெளிப்படையாகவே டிடிவி தினகரனுக்கும், சசிகலாவுக்கும் அழைப்பு விடுத்துவிட்டார்.. அந்த பக்கம் இருந்தும் தினமும் ஏதாவது ஒரு வகையில் சிக்னல் வந்து கொண்டுதான் இருக்கிறது.

டிடிவி + ஓபிஎஸ்
அப்படியானால் இவர்கள் அனைவரும் எப்போது இணைய போகிறார்கள் என்ற அடுத்த எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.. இந்நிலையில், 2 தகவல்கள் அதிமுகவுக்குள் கசிந்து வருகிறது.. முதலாவதாக, இந்த ஒரே மாதத்தில், ஓபிஎஸ் மீதான செல்வாக்கு, தென் மண்டலங்களில் கூடிவிட்டதாம்.. இதற்கு எடப்பாடி பழனிசாமி வகுத்த அவசர பொதுக்குழு முடிவுகள் என்றாலும், மற்றொரு பக்கம் சசிகலா, டிடிவி மீதான இணக்கத்தை ஓபிஎஸ் ஓபனாகவே வெளிப்படுத்தியதுதானாம்.. விரைவில் ஓபிஎஸ், சசிகலா சந்திப்பு நடைபெற வேண்டும் என்றும் தென்மண்டலத்தில் எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளதாம். அநேகமாக, வரும் தேவர் ஜெயந்திக்குள் இவர்கள் சந்திப்பு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

பிரபல நடிகர்
இரண்டாவதாக, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஒரு நடிகர் தென்மண்டலங்களில் பிரச்சாரம் செய்ய போகிறாராம்.. ஆதரவாளர்களையும், நிர்வாகிகளையும் வைத்து, தன்தரப்பு நியாயங்களை எடுத்து வைப்பதைவிட, மக்களிடம் நன்கு அறியப்பட்ட நடிகரை வைத்து, பிரச்சாரம் மேற்கொண்டால், அது நிச்சயம் தங்கள் தரப்புக்கு பலத்தை தரும் என்றும் ஓபிஎஸ் நம்புகிறாராம்.. அதற்காக பிரபல நடிகர் ஒருவரை களமிறக்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது..

ராமராஜன் + ராதாரவி
மேலும், அந்த நடிகர் ஏற்கனவே பழைய அதிமுகவில் இடம் பெற்றவரும்கூட.. அவர்தான் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இந்த முறை பிரச்சாரத்தில் களமிறங்க போகிறாராம்.. பொதுவாக, தேர்தல் சமயங்களில் மட்டுமே இத்தகைய நட்சத்திர பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வரும்நிலையில், இதற்கெல்லாம்கூட பிரச்சாரமா? என்று ஆச்சரியப்பட்டு போயுள்ளனராம்.. இருந்தாலும் அந்த நடிகர் யாராக இருக்கும்? செந்திலா? ராமராஜனா? அல்லது ராதாரவியா? என்ற பல குழப்பம் தென்மண்டலத்தை சூழ்ந்துள்ளது என்றாலும், ஓபிஎஸ் அதிரடிகளை பார்த்து மூக்கின் மீது விரலை வைத்துக் கொண்டுள்ளதாம்..!

முன்னோட்டம்
இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. சசிகலா தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்து வருகிறாராம்.. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள சசிகலா, அதற்கு முன்னோட்டமாக தொண்டர்களை சந்திப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.. இதில் பெரும்பாலான ஆதரவாளர்கள் ஓபிஎஸ்ஸுடன் இணைய வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே சசிகலாவிடம், தங்கள் கருத்தை சொல்லி வருபவர்களாம்.. அதுமட்டுமல்ல, இந்த முறை மேற்கொள்ளப்போகும் சுற்றுப்பயணங்களில், எங்காவது ஒரு புள்ளியில் சசிகலா - டிடிவி - ஓபிஎஸ் நேருக்கு நேர் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications