"டேஞ்சர்".. திமுகவை சுற்றி பின்னப்படும் "அக்னிவலை".. ஆமா.. எதுக்கு இவ்ளோ அர்ஜெண்ட்.. பரபர விவாதம்
இவ்வளவு அவசரமாக அமைச்சரவையை திமுக அரசு மாற்றம் செய்வது ஏன்
சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவி வரும்நிலையில், அதுகுறித்த விமர்சனங்களும், பாராட்டுக்களும், கருத்துக்களும் இணையத்தில் வட்டமடிக்க துவங்கி உள்ளன.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி என்பது கடந்த ஒரு வருட காலமாகவே, வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியாகும்.. ஒவ்வொருமுறையும் அதுகுறித்த செய்திகளும் மீடியாவில் இடம்பிடிப்பதும், பிறகு சத்தமே இல்லாமல் காணாமல் போவதும் தொடர்ந்து கொண்டே வருகிறது.
அதேசமயம், அமைச்சர் பதவியை ஏற்கனவே மாட்டேன் என்றோ அல்லது அமைச்சர் பதவி கிடைத்தாக வேண்டும் என்றோ உதயநிதி ஒருநாளும் சொன்னதில்லை..

தனித்தனி ரூம்
உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக மீண்டும் செய்திகள் வலம்வர ஆரம்பித்துள்ளன.. 14-ந் தேதியன்று அவர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று சொல்கிறார்கள்.. அவருக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என்பது குறித்தும்கூட அனுமானங்கள் வட்டமடிக்க துவங்கி உள்ளன.. அதுமட்டுமல்ல, தலைமை செயலகத்தில் அமைச்சர்களுக்கு தரை தளம், முதல் மாடி, 2-வது மாடி, 3-வது மாடிகளில் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டு இலாகா வாரியாக அமைச்சர்கள் அந்த அறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

பவர் பவர்
அந்தவகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தலைமை செயலகத்தில் 10-வது கேட் நுழைவு வாயில் அருகே உள்ள அறை வேகமாக தயாராகி வருகிறதாம். இதேபோல் 2-வது மாடியிலும் ஒரு அறை முழு வீச்சில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், அவருக்காக இதில் ஒரு அறை ஒதுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிது.

அவசர அவசரமாய்
இந்நிலையில், உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்றதுமே, அதுகுறித்து 2 விதமான அலசல்கள் சோஷியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சாரார் இதை எதிர்க்கிறார்கள்.. மறுசாரார் இதை வரவேற்று வருகிறார்கள்.. உதயநிதியின் அரசியல் பிரமிப்பை கூட்டி வருகிறது.. இளைஞரணி செயலாளராக கட்சிக்கும், சட்டமன்ற உறுப்பினராக தொகுதி மக்களுக்கும் உதயநிதி செய்த பணிகள் அளப்பரியவை.. சேப்பாக்கம் தொகுதி மக்களை போய் கேட்டுப் பாருங்க, உதயநிதியின் பவர் தெரியும் என்று பூரித்து சொல்கிறார்கள் தொண்டர்கள்.

முக சுளிப்பு
அதேபோல, உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்றதுமே, வழக்கம்போல் பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தும் வருகின்றன.. "ஸ்டாலின் பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்று முதல்வராக ஆட்சிபுரியும்போது, உதயநிதியின் அரசியல் முதிர்ச்சியின்மை உள்ளது.. வாரிசு என்ற அடிப்படையில் அமைச்சராக்க வேண்டும் என்று சொல்வது மக்களைத்தான் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும்... மேலும் திமுகவில் இருக்கும் மூத்த தலைவர்களையும் முகம் சுளிக்கவைக்கும்... சட்டரீதியாகப் பார்த்தால் அவர்கள் செய்வது சரி என்றாலும், மனசாட்சியின்படி, ஜனநாயகத்தின்படி அதிகாரம் அனைத்தையும் தன் குடும்பத்தினருக்கே கொடுப்பது எந்த வகையில் சரியானதாக இருக்கும்?" என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகின்றன.

அலசல்கள்
இப்படி ஆதரவு & எதிர்ப்பு என இரு தரப்பு அலசல்கள் நடந்து வரும்நிலையில், நடுநிலையாளர்கள் குறிப்பாக திராவிட பற்றுடையவர்கள் இதை பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பதையும் நாம் அறிய வேண்டி உள்ளது.. அந்தவகையில், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில் தன்னுடைய கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்.. உதயநிதிக்கு இத்தனை அவசரமாக பதவி தர வேண்டுமா? சூழ்நிலை இங்கே சரியில்லையே.. என்று அக்கறையுடன் அந்த பேட்டியில் சுட்டிக்காட்டி உள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

அக்னிவலை
"ரவி போன்றவர்கள் ஆளுநராக தமிழகத்தில் உள்ள நிலையில்.. திராவிட மாடலுக்கும், குஜராத் மாடலுக்கும் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில்... மத்திய அரசு நம்மீது வைக்கப்படும் பார்வைகள் வித்தியாசமாக உள்ள நிலையில்.. காசி சங்கமத்தை நடத்துவது உட்பட அக்னிவலையில் திமுக அரசு உள்ளது. இந்த நேரத்தில் அமைச்சர் பதவி தரப்படுவது சரியா? யாரை வேண்டுமானாலும் அமைச்சராக்குவதற்கு முதல்வருக்கு உரிமை உள்ளது.. எம்எல்ஏவாக இல்லாவிட்டாலும்கூட ஒருவரை அமைச்சர் ஆக்கலாம்.. ஆனால், கெடுபிடிகள் சூழ்ந்து வரும்போது, அவைகளை புரிந்து கொண்டு, சில விஷயங்களை நாம் தவிர்த்து விடலாம்..

எம்ஜிஆர்
இதனால், உதயநிதிக்கு இன்னும்கூட பயிற்சி கிடைக்கலாம்.. மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது, நலத்திட்ட உதவிகளை உதயநிதி வழங்குவது உட்பட எத்தனையோ விமர்சனங்கள் வருகின்றன.. விமர்சனங்கள் இல்லாமல் இருக்க முடியாது.. அமைச்சராகிவிட்டால், சினிமாவில் நடிப்பது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என தெரியவில்லை.. இப்படித்தான், அன்று மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, எம்ஜிஆர் இங்கே முதல்வராக இருந்தார்.. பத்திரிகைகளில் அப்போது ஒரு செய்தி வந்தது எம்ஜிஆருக்கு நடிக்க வேண்டும் என்று விரும்பி, மொரார்ஜி தேசாயிடம் அனுமதி கேட்டதாகவும், அதற்கு மொரதர்ஜி மறுத்துவிட்டதாகவும் செய்தி வெளியானது..

ஹேஸ்யங்கள்
இது மிகப்பெரிய பிரச்சனையாக அப்போது மாறிவிட்டது. சினிமாவில் நடிக்க அனுமதி எதுவுமே கேட்கவில்லையே என்று முதல்வர் அலுவலகம் மறுக்க, அனுமதி கேட்டு எழுதிய கடிதத்தை மத்திய அரசு தரப்பில் லீக் செய்துவிட இப்படியெல்லாம் அன்று நடந்தது.. அதனால், இன்றைய சூழலில் உதயநிதிக்கு பதவி தேவையா? இவ்வளவு அவசரம் எதற்கு? அரசியல் நாக்கு எதையும் நாளைக்கு பேசிவிடும்.. பல ஹேஸ்யங்கள் வந்து போகும். பிறகு பூதக்கண்ணாடியை வைத்து ஒவ்வொன்றும் பார்க்கப்பட்டுவிடும்.. அவரது துறையில் அவர் மிகச்சிறப்பாக ஜொலித்து வருகிறார்..

பூதக்கண்ணாடி
இந்த நேரத்தில் விமர்சனங்கள் தேவையற்றது.. காரணம், 2024 தேர்தல் என்பதில், தமிழகத்தின் பங்கு பெரிய அளவில் உள்ளது.. அதனால், விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.. உதயநிதியின் திறமை மீதோ, அல்லது வாரிசு அரசியல் என்பதிலோ எந்தவித எதிர்க்கருத்தும் எனக்கில்லை.. இன்னும் சொல்லப்போனால், வாரிசுகள் வந்தால்தான், சித்தாந்தங்கள் நிலைத்திருக்கும்.. ஆனால், இந்த நேரத்தில், சுற்றிலும் எதிரிகள் படர்ந்திருக்கும்போது, ஏன் அவசரம்? திராவிட இயக்கத்தின்மீது பற்று இருக்கும் காரணத்தினால் மட்டுமே நான் அச்சப்படுகிறேன்" என்றார்.
-
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
விசிகவுக்கு 7 தொகுதிகள்.. தேமுதிகவுக்கு எவ்வளவு? நாளை தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக! -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு












Click it and Unblock the Notifications