"மதி இறுக்கம்".. அடடா இந்த வார்த்தை புதுசா இருக்கே.. தங்கம் தென்னரசு சொன்னதை கவனிச்சீங்களா? சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் பயன்படுத்தப்பட்ட புதிய பெயர் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மதி இறுக்கம் (Autism) உடையோருக்கான உயர்திறன் மையம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட்டில் நேற்று அதிரடியாக பல அறிவிப்புகள் வெளியாகின. குடிசையில்லா தமிழ்நாடு இலக்கை எட்ட 2030ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். கிராமப்புற சாலைப்பணிகள் ₹1000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிட, அரசுப் பள்ளி மாணவரின் உயர் கல்வியை சேர்க்கையை உயர்த்தவும் தமிழ் புதல்வன் என்னும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும்.

 Mathi Irukkam, The new Tamil Word used for Autism by Minister Thangam Thennarasu in Budget

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள், பாடப்புத்தகங்கள் ,பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவரது கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்

பட்ஜெட் அறிவிப்புகள்: அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 2482 ஊராட்சிகளில் 1147 கோடி மதிப்பீட்டில் பணிகள் செய்யப்படும். கிராமங்களில் ₹365 கோடி மதிப்பீட்டில் 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, ரூ,4,625 கோடி மதிப்பில் பெறப்பட்டு மத்திய அரசின் மூலதன பங்கீட்டு நிதிக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் .

ஒதுக்கீடு செய்யப்படும்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ₹3300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை மறுசுழற்சி உள்ளிட்டவையை கையாள புதிய நிறுவனம் ஏற்படுத்தப்படும். மூன்றாம் பாலினத்தோரின் கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும். உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்

பள்ளி: அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்கு 370 கோடி ஒதுக்கப்படும். மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

மதி இறுக்கம்: இந்த பட்ஜெட்டில் பயன்படுத்தப்பட்ட புதிய பெயர் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மதி இறுக்கம் (Autism) உடையோருக்கான உயர்திறன் மையம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆட்டிசம்: இதில் ஆட்டிசம் என்ற வார்த்தைக்கு மாற்றாக புதிய தமிழ் வார்த்தை மதி இறுக்கம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது. 19 ஆண்டுகளுக்கு முன் தமிழ் விக்சனரியில் சுந்தர் என்பவர் பரிந்துரைத்த "மதி இறுக்கம்" (Autism) என்ற சொல் தமிழ்நாடு அரசால் தற்போது அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இது மாறுபாடு, நோய் இல்லை என்பதால்.. மதி இறுக்கம் என்ற பெயரில் மிக அழகாக, யாருக்கும் உறுத்தாத வண்ணம், அதே சமயம் அந்த பாதிப்பின் அழுத்தம் உணரும் வகையில் இந்த புதிய வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+