ஆர்மில ஜெய் பஜ்ரங்பலினு சொன்னாங்களா? சீறிய மே 17 திருமுருகன் காந்தி..அர்ஜுன் சம்பத் கொடுத்த விளக்கம்
சென்னை: அமரன் திரைப்படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, அமரன் படத்தில் ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களையும் எதிரிகளாக சித்தரிப்பது கண்டத்திற்குரியது எனவும், ராணுவத்தில் ஜெய் பஜ்ரங் பலி என எப்போது முழுக்கமிட்டார்கள் என கூறியிருந்தார். இந்நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்திய ராணுவத்தில் பல்வேறு விதமான படைப்பிரிவுகள் உள்ளன. ராஜ்புத் ரெஜிமென்ட், ஜம்மு காஷ்மீர் ரெஜிமென்ட், டோக்ரா ரெஜிமென்ட், மதராஸ் ரெஜிமென்ட், மராட்டா லைட் இன்ஃபான்டரி, மகர் ரெஜிமென்ட், ஒவ்வொரு ரெஜிமெண்ட் படை பிரிவுக்கும் ஒவ்வொரு விதமான முழக்கங்கள் உள்ளன

குறிப்பாக ராஜ்புத் ரெஜிமென்ட் க்கு "போலோ பஜ்ரங் பலிக்கு ஜெய், ராஜபுதன ரைபில் படை பிரிவுக்கு ராஜா ராம் சந்திரகி ஜெய், டோக்ரா ரெஜிமென்ட்க்கு "ஜாலா மாதா கி ஜெய் மராத்தா, லைட் இன்பான்டரி படைப்பிரிவுக்கு போலோ ஸ்ரீ சத்ரபதி சிவாஜி மகாராஜ் கீ ஜெய், மகர் ரெஜிமென்ட் க்கு "போலோ ஹிந்துஸ்தான் ஜெய்
மேலும் இந்திய ராணுவத்தின் விமான சாகச நிகழ்ச்சி சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொழுது இராணுவ படைப்பிரிவின் முழக்கங்களாக வெற்றிவேல் வீரவேல் என்கிற முழக்கமும் எழுப்பப்பட்டது. ஓம் காளி! ஜெய் காளி!! வெற்றிவேல்! வீரவேல்! சீக்கிய படைப்பிரிவின் "ஸத் ஸ்ரீ அகால்" பாரத் மாதா கி ஜெய் இந்த முழக்கங்கள் எல்லாம் ராணுவ படை பிரிவின் முழக்கங்கள் ஆகும். ஹர ஹர மகாதேவ் என்கிற முழக்கமும் நமது ராணுவ படைப்பிரிவில் உண்டு
சமீபத்தில் வெளியான மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் ராஜபுத் படை பிரிவில் இடம் பெறுவார். அவர் பஜ்ரங் பலிக்கு ஜெய் என்கிற முழக்கங்களை எழுப்புவார் பாரத் மாதா கீ ஜெய் என்கிற முழக்கங்களும் உண்டு. திரைப்படத்தில் இந்த முழக்கங்கள் இடம்பெறுகின்ற காரணத்தினால் இது ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா இயக்கங்களின் முழக்கம் இதை இந்த திரைப்படத்தில் இடம் பெறச் செய்வதன் மூலம் முஸ்லிம் மக்களின் மணது புண்படுகிறது இந்து மத வாதத்தை திணிக்கிறது என்கிற தொனியில் கருத்து தெரிவித்துள்ளனர் எஸ்டிபிஐ கட்சியினர்
இந்தத் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற எஸ்டிபிஐ அமைப்பைச் சார்ந்தவர்களும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தியும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அமரன் திரைப்படம் குறித்து தேசவிரோத கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். மக்கள் மத்தியில் மத ரீதியான பதட்டத்தை உருவாக்கி இத்திரைப்படத்தை தடை செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்கள்
உருவ பொம்மை எரிப்பு ராஜ்கமல் நிறுவன முதலாளி பட தயாரிப்பாளர் கமலஹாசனுக்கு எதிராக! மற்றும் இப்படத்தை வெளியிட்டுள்ள ரெட் ஜெயன்ட் திரைப்பட நிறுவனத்திற்கு எதிராக இப்படத்தில் நடித்துள்ள திரை கலைஞர்களுக்கு எதிராக தியேட்டர்கள் முன்பாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகிறார்கள். காவல்துறையின் தடையை மீறி தள்ளுமுள்ளுகளில் ஈடுபடுதல்! போன்ற அராஜக செயல்களை செய்து வருகிறார்கள்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அமரன் திரைப்படத்திற்கு திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ அமைப்பு இந்திய நாட்டில் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அரசியல் பிரிவாகும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்தது போல இந்த அமைப்பையும் தடை செய்ய வேண்டும்
அமரன் திரைப்படத்தில் ராணுவத்தில் தேசபக்தியுள்ள இந்திய முஸ்லிம்கள் சிறப்பாக பணியாற்றுவதை காட்சிப்படுத்தி உள்ளார்கள். இந்திய பாதுகாப்பு படையினருக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதிகளை குறித்து தகவல் கொடுக்கக்கூடிய முஸ்லிம் வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்
பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பலியான முஸ்லிம் இளைஞர்களை மனம் திருத்தி ராணுவத்திற்கு உதவி செய்யக் கூடியவர்களாக மாற்றுவதையும் படத்தில் காட்சி படுத்தியுள்ளார்கள்
பாகிஸ்தான் ஆதரவுடன் காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்களை மூளை சலவை செய்து எல்லை தாண்டி அழைத்துச் சென்று பயிற்சி கொடுத்து பயங்கரவாதத்தில் ஈடுபடுத்துகிறதையும் காட்சி படுத்தியுள்ளார்கள்
இந்திய ராணுவத்தின் மீதும் மத்திய அரசு அலுவலகங்களின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்துவதற்கு தூண்டி விடுவதையும் காட்சி படுத்தியுள்ளார்கள். மேலும் காஷ்மீர் மாநில முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புகளின் தலைவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் படிப்பதையும் அப்பாவி முஸ்லிம் குழந்தைகள் கையில் கற்களை கொடுத்து ராணுவத்திற்கு எதிராக கல்வீசி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுத்துவதையும் காட்சிப்படுத்தி உள்ளனர்
2014ஆம் ஆண்டுக்கு முன்பாக காஷ்மீரத்தில் இத்தகைய சூழ்நிலையே இருந்தது. மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் மற்றும் இந்திய ராணுவம் அந்த காலகட்டத்தில் காஷ்மீர் முஸ்லிம்களை தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு உயிரை கொடுத்து போராடி உள்ளார்கள். பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தையே இந்திய ராணுவத்தினர் நடத்தினார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய ராணுவம் வன்முறை சம்பவங்களை நடத்தியதாக மே 17 இயக்கமும் எஸ்டிபிஐ அமைப்பும் மிக தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்
மேலும் இந்த படத்தை தயாரித்த ராஜ்கமல் புரொடக்ஷன் கமலஹாசனுக்கு சொந்தமானது கமலஹாசன் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார் இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஸ்டாலின் குடும்பத்தாருக்கு குறிப்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. எனவே அவர்கள் இந்த படத்தை பார்த்து மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் இந்த படம் பார்த்து பாராட்டி தேசபக்தி உள்ள படம் என்று கருத்து தெரிவித்திருக்கின்றார். தமிழகம் முழுக்க பொதுமக்களிடம் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
காஷ்மீரில் 2014க்கு முன்பாக நிலவி வந்த உண்மையான சூழ்நிலையை இப்படம் தெளிவாக்குகிறது. நமது இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும் தீரத்தையும் தியாகத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்திய ராணுவத்தின் மீதும் பாரத நாட்டின் மீதும் மிகப்பெரிய மரியாதையை தேசபக்தியை உருவாக்கியுள்ளது. இப்படத்தை பார்க்கும் பலர் நமது ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு தலைவணங்கி கண்கலங்குகின்ற செய்திகளை நாம் பார்க்கின்றோம்
இந்த படத்தை பொதுமக்கள் பார்த்து உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ளக் கூடாது என்பதையே எஸ்டிபிஐ அமைப்பும் மே 17 அமைப்பும் சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார்கள். அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இடம் இந்த படம் காஷ்மீர் மக்களுக்கு எதிரானது என்றும் குறிப்பாக முஸ்லிம் மக்களை திசை திருப்பி இந்திய ராணுவத்திற்கு எதிரான தவறான கருத்துக்களை பரப்புவதற்கு முயற்சிக்கிறார்கள்
இதை முறியடிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுக்க இந்த படத்திற்கு மக்கள் அச்சமின்றி திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து செல்லக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மேலும் கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள் அனைத்து பொதுமக்களும் இந்த படத்தை பார்த்து பயன்பெறக்கூடிய வகையில் இப்படத்திற்கு மத்திய மாநில அரசுகள் வரி விலக்கு கொடுக்க வேண்டும்
தமிழகத்தின் அனைத்து கல்வி நிலையங்களிலும் இலவசமாக இந்த திரைப்படத்தை திரையிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் இந்த படத்தின் டிக்கெட்டுகளை வாங்கி பத்திரிக்கையாளர்கள், போலீசார்,பொதுமக்கள் மற்றும் ராணுவத்தின் குடும்பத்தாருக்கு இலவசமாக வழங்க உள்ளோம். இது சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்
வருகின்ற பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை கோவை திரையரங்கில் பத்திரிக்கையாளர்கள் ராணுவ வீரரின் குடும்பத்தார்கள் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 100 பேர் இந்த திரைப்படத்தை பார்க்க உள்ளோம். திரையரங்கிலேயே திரையரங்கத்தின் முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடத்த உள்ளோம் காலை 10 மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும்" என கூறியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications