சீமான் மானத்தமிழ்ப்பிள்ளையாக இருந்தால் பெரியார் குறித்து என்னுடன் விவாதிக்கலாம்- திருமுருகன் காந்தி
சென்னை: தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்து தம்முடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விவாதிக்க தயாரா? என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சவால் விடுத்துள்ளார். முன்னதாக தாம் பெரியார்- அம்பேத்கர் குறித்து இருகரம் விரித்து விவாதத்துக்கு தயாராக இருப்பதாக சீமான் அழைப்பு விடுத்திருந்தார்.
தந்தை பெரியாரை இழிவுபடுத்தி தொடர்ந்து பேசி வருகிறார் சீமான். அவருக்கு எதிராக பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். திமுகவின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், பெரியாரை இழிவாகப் பேசுகிறவன் பிறப்பையே நான் சந்தேகிக்கிறேன் என மிக காட்டமாக கூறியிருந்தார்.

அதேநேரத்தில் சீமானுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சீமான் தங்கள் குரலில் பேசுவதாகவும் பாஜக தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் மிக ஆவேசமாக, பெரியார்- அம்பேத்கர் எந்த புள்ளியில் ஒன்றுபடுகிறார்கள்? என்பது குறித்து விவாதிக்க தயார்.. இருகரம் விரித்து விவாதத்துக்கு அழைக்கிறேன் என அழைப்பு விடுத்திருந்தார்.
சீமானின் இந்த சவாலை ஏற்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விவாதத்துக்கு தயார் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக திருமுருகன் காந்தி கூறுகையில், இருகரம் விரித்து விவாதத்திற்கு தயாராக இருப்பதாக பேட்டி கொடுத்து இருக்கிறீர்கள். மகிழ்ச்சி! விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன் என 4 நாட்களுக்கு முன்பே தொலைக்காட்சி பேட்டியில் பகிரங்கமாக தெரிவித்துவிட்டேன். எங்கே, எப்போது, சந்திக்கலாம் என இடம், தேதியை நீங்கள் முடிவுசெய்கிறீர்களா? அல்லது நான் குறிக்கவா? உங்கள் மொழியில் சொல்வதாக இருந்தால், மானத்தமிழ்ப்பிள்ளையாக இருந்தால், விடுத்த சவாலை எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்குமென நினைக்கிறேன். நேரடியாக சந்திப்போம், விவாதிப்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications