வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 234 தொகுதிகளுக்கும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்த தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியை கண்காணிக்க 234 தொகுதிக்கும் பார்வையாளர்களாக வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் கடந்த 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிவில் தமிழகத்தில் 85.15 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு முடிந்ததும், மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் தற்போது 75,064 வாக்குப்பதிவு இயந்திரங்களும் துணை ராணுவ வீரர்கள் மற்றும் தமிழக போலீசார் என 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முகவர்கள் சிசிடிவி மூலம் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தினசரி சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படும். இந்த பணியில் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 62 வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. பெரிய தொகுதியாக இருந்தால் 20 முதல் 28 மேஜைகள் போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியதும், முதல் சுற்று முடிவு காலை 9 மணி முதல் தெரியவரும். முன்னதாக, வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வாக்குகள் எண்ணப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேஜைகள் போடுவது, சிசிடிவி கேமரா பொருத்துவது, சவுக்கு கட்டையால் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை கண்காணிக்க வெளிமாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் என வெளிமாநிலங்களை சேர்ந்த 234 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் அனைவரும் மே 2 ஆம் தேதிக்கு முன்னதாக தமிழகத்தில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு வந்து, வாக்கு எண்ணிக்கை தொடர்பான பணிகளை பார்வையிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கிய பிறகு, ஒவ்வொரு சுற்று முடிவுகளும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த தேர்தல் பார்வையாளர்கள் கையெழுத்திட்ட பிறகே அதிகாரப்பூர்வமாக வெளியிட முடியும். மேலும், வாக்குப்பதிவின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க, தேர்தல் அலுவலர் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வெளிமாநில தேர்தல் பார்வையாளர் தான் அவ்வப்போது உத்தரவு பிறப்பிப்பார்.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, இறுதி முடிவு அறிவிக்கும்போதும் அந்தந்த தொகுதி தேர்தல் பார்வையாளர் கையெழுத்து பெற்ற பிறகே அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications