களமிறங்கிய "பழைய கை".. சாதி பாகுபாட்டிற்கு எதிரான புதிய யூஜிசி விதிமுறை.. நெருப்பில் கை வைத்த பாஜக?
சென்னை: உயர் கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்து உள்ள புதிய விதிகளைப் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆதரித்துள்ளார். இந்த விதிமுறைகளை எதிர்த்து வரும் பொதுப் பிரிவு சமூகத்தின் ஒரு சாராரின் செயல், சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடு என்று அவர் கடுமையாகக் கண்டித்தார்.
மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் யூஜிசி இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்கும் என்று.. பாஜகவிற்கு பொதுவாக அதிக ஆதரவு தரும் பொதுப்பிரிவினர் கனவில் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால் அப்படி ஒரு அறிவிப்பைதான் யூஜிசி நேற்று முதல்நாள் வெளியிட்டது. பொதுவாக திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் கொண்டு வரக்கூடிய சட்டத்திற்கு இணையான விதிமுறைகளை.. அதே ஸ்டைலில் யூஜிசி நேற்று முதல்நாள் அந்த அறிவிப்பை வெளியிட்டது.

UGC புதிய விதிமுறை
கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக UGC புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. 2012-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய விதிமுறைகளை மாற்றி, 2026 ஜனவரியில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது பல்கலைக்கழக மானியக் குழு (UGC). யுஜிசி 2026 சமத்துவ விதிமுறைகள் எனப்படும் இந்த விதிமுறைகள் கடுமையான விவாதங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. சாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் விதமாக இந்த விதிமுறைகள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.
இதன் நோக்கம், நாடு முழுவதும் சமூக நீதியையும் பாகுபாடற்ற சூழலையும் உறுதி செய்வதே ஆகும்.
முன்னதாக 2012-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகளின்படி, ஒரு மாணவர் சாதி ரீதியிலான பாகுபாட்டிற்கு உள்ளானார் என்றால் அதில் விசாரணைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும் சாதி பாகுபாட்டை களைய ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பார். மேலும் இது தொடர்பாக புகார்களை அளிக்க அதற்கான மையம் இருக்க வேண்டும். இவை பெரும்பாலும் எஸ்சி (SC) மற்றும் எஸ்டி (ST) மாணவர்களுக்கான பாதுகாப்பை முக்கியமாக கருதின. மற்ற இடைநிலை சாதிகளுக்கு இதில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
ஒரு புகார் அளிக்கப்பட்டால், அதன் மீது 60 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால், இந்த அமைப்பிடம் பெரிய அதிகாரம் இல்லை. உதாரணமாக தவறான புகார்களுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. நிறுவன ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெரிய அளவில் இடம்பெறவில்லை.
புதிய விதிமுறை - சாதிய பாகுபாடுகளுக்கு செக்
புதிய 2026 விதிமுறைகளின்படி, முதன்முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் பாலின சிறுபான்மையினர் (Gender Minorities) ஆகியோரும் இந்தப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மேலும், இது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் பொருந்தும். அதாவது பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட தங்களுக்கு சாதிய பாகுபாடு காட்டப்பட்டால் புகார் அளிக்கலாம். புதிய விதிகளின் கீழ் புகார்கள் மீதான நடவடிக்கை மிகவும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் குழு கூடி விவாதிக்க வேண்டும். 15 வேலை நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், அதன் பிறகு 7 நாட்களுக்குள் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை UGC இதை கண்காணிக்கும்.
இந்த விதிகளுக்குக் கீழ்ப்படியாத கல்வி நிறுவனங்களின் நிதி முடக்கப்படலாம் அல்லது அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம். இது பழைய முறையைப் போல வெறும் ஆலோசனை அமைப்பாக இல்லாமல், அதிக அதிகாரம் கொண்ட சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.
மாயாவதி வரவேற்பு
உயர் கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்து உள்ள புதிய விதிகளைப் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆதரித்துள்ளார்
இந்த விதிமுறைகள், கல்வி நிறுவனங்களில் பாகுபாடுகளைக் கட்டுப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட மிக அவசியம் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தனது அறிக்கையில் வலியுறுத்தினார். உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி குறிப்பிடுகையில், "பல்கலைக்கழக மானியக் குழுவால் நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் களைவதற்காக வகுக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் அம்சங்கள் பொதுப்பிரிவினர் சிலரை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. சாதிய மனப்பான்மையால் பொதுப் பிரிவைச் சேர்ந்த சிலர் எழுப்பும் இந்த எதிர்ப்பு முற்றிலும் நியாயமற்றது.. அவர்கள் தொடுக்கும் வழக்கை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார்.
தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இது அரண் போல செயல்படும் விதிமுறை ஆகும். கல்வியில் சமத்துவம் மற்றும் கண்ணியத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விதிகள் உள்ளன. இதை பொதுப்பிரிவினரும் சேர்ந்து வரவேற்க வேண்டும்... சுயநலமும், ஊழலும் நிறைந்த தலைவர்களால் பொதுப்பிரிவினர் சிலர் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என மாயாவதி எச்சரித்தார்.
தீயில் கை வைத்த பாஜக
இந்த விதிமுறை மாற்றங்கள் ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், மற்றொருபுறம் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளன. முக்கியமாக பாஜக ஆதரவாளர்கள் இடையிலேயே கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் அதிகமாக இருக்கும் பிராமண அமைப்புகள், பிராமண மகா சபா போன்ற இயக்கங்கள் இதை எதிர்த்து உள்ளன.
குறிப்பாக, 2012 விதிகளைப் போலவே இப்போதும் 'பொய்ப் புகார்களுக்கு' எதிரான தெளிவான தண்டனைகள் அல்லது பாதுகாப்பு வரம்புகள் வழங்கப்படவில்லை என்று பாஜக ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.
இதனால் கல்வி வளாகங்களில் ஒருவித அச்ச உணர்வு ஏற்படலாம் என்றும், இது நிர்வாக ரீதியான சிக்கல்களை உருவாக்கும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். இருப்பினும், வளர்ந்து வரும் பாகுபாடுகளைத் தடுக்க இத்தகைய வலுவான சட்டங்கள் காலத்தின் கட்டாயம் என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications