எம்பிபிஎஸ், பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
சென்னை: தமிழகத்தில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 6 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளை புதன்கிழமை (ஜூன் 25) நிறைவடையவுள்ளது. தமிழகத்தில் இதுவரை 63,475 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இந்த ஆண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி முதல் விண்ணப்ப பதிவானது தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மட்டும் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் இந்திய ஒதுக்கீட்டுக்காக 888 இடங்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம், சுயநிதிக் கல்லூரி என அரசு, தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படவுள்ளது.
பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை தனியார், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு ஜூன் 6 ஆம் தேதி தொடங்கியது. www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவின் தகவல்படி, இதுவரை 63,476 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விண்ணப்பப் பதிவுக்கு நாளை (ஜூன் 25) கடைசி நாளாகும். விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அவகாசம் வழங்குவதற்கான வாய்ப்பும் குறைவு என்று கருதப்படுகிறது.
மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள், கடைசி நேரத்தில் அவசரப்படுவதைத் தவிர்த்து விரைந்து விண்ணப்பப் பதிவை நிறைவு செய்து பயன்பெற வேண்டும் என மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications