Mallai Sathya: மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்- வைகோ அதிரடி உத்தரவு!
சென்னை: மதிமுகவிலிருந்து அதன் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பிறப்பித்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
பொதுவெளியில் கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக பேசி வந்ததாக விளக்கம் கேட்டு கடந்த 17ஆம் தேதி மல்லை சத்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸுக்கு உரிய விளக்கத்தை அவர் அளிக்கவில்லை என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து இன்றைய தினம் மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த மல்லை சத்யா தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாகவும் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
மதிமுகவில் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் முக்கியக் காரணங்கள் பின்வருமாறு:
1. வாரிசு அரசியல் சர்ச்சை
மல்லை சத்யா, வைகோவின் மகன் துரை வைகோ கட்சியில் முக்கியப் பதவிக்கு வந்ததில் இருந்து, வாரிசு அரசியல் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
வாரிசு அரசியலுக்கு எதிராகக் கட்சியைத் தொடங்கிய வைகோ, இப்போது தன் மகனுக்கே முக்கியப் பதவி கொடுப்பதாக மல்லை சத்யா நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றம் சாட்டினார். இது இருவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.
"மறுமலர்ச்சி திமுக, இப்போது 'மகன் திமுகவாக' மாறிவிட்டது" என்று மல்லை சத்யா வெளிப்படையாகக் கூறியது இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.
2. கட்சி விரோத நடவடிக்கைகள்
மல்லை சத்யா, கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக துரை வைகோவும், அவரது ஆதரவாளர்களும் குற்றம் சாட்டினர்.
சமூக வலைதளங்களில் துரை வைகோவுக்கு எதிராக அவதூறு பரப்பும் நபர்களுடன் மல்லை சத்யா நெருக்கமாக இருப்பதாகக் கூறப்பட்டது. இது கட்சிக்குள் ஒரு குழப்பமான சூழலை உருவாக்கியது.
3. வைகோவின் துரோகிப் பட்டம்
இந்த மோதலின் உச்சகட்டமாக, வைகோ ஒரு பொது நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததுபோல, தனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார் என்று மறைமுகமாகப் பேசினார்.
வைகோவின் இந்த வார்த்தைகள் மல்லை சத்யாவை மிகவும் காயப்படுத்தின. "வாரிசு அரசியலுக்காக வைகோ தனக்கு துரோகிப் பட்டம் கொடுத்துள்ளார்" என மல்லை சத்யா பதிலளித்தார்.
மல்லை சத்யா, தனது 32 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை வைகோ தனது மகனுக்காக வீழ்த்துவதாக உணர்ச்சிபூர்வமாகக் கடிதம் எழுதி, நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார்.
இந்தக் காரணங்களால், மதிமுகவில் நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல் தற்போது வெடித்துள்ளது. இதன் விளைவாக, மல்லை சத்யா கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த 17 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் எந்த பதிலும் தராததால் மல்லை சத்யா மதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறப்பித்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications