பிரஸ் மீட்டில் வைகோ அடித்த கமெண்ட்.. வாய்விட்டுச் சிரித்த மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுகவினர்!
சென்னை: பத்திரிகையாளர் சந்திப்பின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அடித்த கமெண்ட்டால் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் வாய்விட்டுச் சிரித்தனர். மதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்திற்கு இன்று நடந்த கூட்டத்தில் சமரசம் செய்து வைத்துள்ளார் வைகோ.
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முதன்மை செயலாளர் துரை வைகோ இடையே எழுந்த பனிப்போர் காரணமாக தமது முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ தாமாகவே விலகுவதாக அறிவித்தார். இந்தச் சூழலில் மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மதிமுக கூட்டம்
இந்தக் கூட்டத்தில் பெரும்பான்மையான நிர்வாகிகள் துரை வைகோ, ராஜினாமா முடிவை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். இந்தக் கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா, பதவியில் இருந்து விலக தயார் என்று கூறினார்.
மதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யத் தயார். கட்சி நிர்வாகிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியை விட்டு விலக்கி வைத்து விடுங்கள். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருந்து விட்டு போகிறேன்." என்றார்.
சமாதானம்
பிறகு துரை வைகோ - மல்லை சத்யா இருவரையும் சமாதானம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. இதனைத் தொடர்ந்து, நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெறுவதாக துரை வைகோ கூறினார். கட்சிக்காக இணைந்து பணியாற்றுவோம் என்று இருவரும் நிர்வாகக் குழு கூட்டத்தில் அறிவித்தனர்.
வைகோ பேட்டி
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "இனி இதுபோன்ற சூழலுக்கு இடம் கொடுக்கப் போவதில்லை என மல்லை சத்யா உறுதி அளித்து உள்ளார். துரை வைகோ மனம் திறந்து பேசினார். இருவரும் பிரச்சனையை நாகரிகமாக தீர்த்தனர். துரை வைகோ ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார். இருவரும் கைகுலுக்கி ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கொண்டனர். இணைந்து பணியாற்றுவோம் என உறுதி அளித்துள்ளனர்." என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய துரை வைகோ, "ஜனநாயக இயக்கத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். நடந்தவை நடந்ததாக இருக்கட்டும் இனிமேல் நடப்பது நல்லதாக இருக்கட்டும். மல்லை சத்யாவிற்கு நானும் உறுதுணையாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்தேன்" எனத் தெரிவித்தார்.
வைகோ கமெண்ட்
இதையடுத்து மல்லை சத்யாவை பேச அழைத்தார் வைகோ. அவர் பரவாயில்லை, என மறுத்தார். அதற்கு வைகோ அடித்த கமெண்ட்டால் அங்கு சிரிப்பலை எழுந்தது.
"மல்லை சத்யா பேசாமல் போய்விட்டார்னு எழுதுவாங்க.. துரை வைகோ பேசினார்.. மல்லை சத்யா பேச மறுத்துவிட்டார்னு செய்தி போடுவாங்க" என வைகோ கமெண்ட் அடித்தார். இதையடுத்து அங்கிருந்த மதிமுகவினர் வாய்விட்டுச் சிரித்தனர்.
மல்லை சத்யா பேச்சு
பின்னர் மல்லை சத்யா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "என் அரசியல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிற, குடத்திலிட்ட விளக்காக இருந்த என்னை குன்றின் மேல் வைத்து அழகு பார்க்கும் அன்புத் தலைவர் வைகோ சொன்னதுதான் இங்கு நடந்தது.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அந்தப் பதவியில் நீடிக்க வேண்டும். என்னுடைய நடவடிக்கைகள் அவரை காயப்படுத்தி இருக்குமேயானால் நான் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன், நீங்கள் தொடர்ந்து கழகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனச் சொல்லி இருக்கிறேன். அவரும் அதை ஏற்று பரிசீலனை செய்வதாகச் சொன்னார்.
இணைந்த கைகளுக்கு எப்போதுமே வலிமை அதிகம். மனிதன் பலகீனமானவன். ஒரு காற்று கீழே தள்ளிவிடும். கல் கூட கீழே இடறிவிடும். ஆனால் மனிதர்கள் பலமானவர்கள். பலமான மனிதர்கள் மலையைக் கூட உடைத்தெறியக் கூடிய சக்தி படைத்தவர்கள். நானும் சகோதரர் துரை வைகோவும் இணைந்து, லட்சியத் தலைவர் வைகோ கண்ட கனவை உறுதியாக நிறைவேற்றப் பாடுபடுவோம்" எனத் தெரிவித்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications