வாடகை தாய் சர்ச்சை.. நயன்தாரா உடல்நல பாதிப்புக்காக சிகிச்சை எடுத்தாரே? எதற்கு? மருத்துவ குழு விசாரணை
சென்னை: நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதாரத் துறை இணை இயக்குநர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இவர்கள் விதிகளை மீறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
திருமணமாகி 5 ஆண்டுகளுக்குள் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள சட்டத்தில் இடம் இல்லை. அப்படியிருக்கும் போது நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி எப்படி திருமணமான 4 மாதங்களில் குழந்தை பெற்றுக் கொண்டனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மா சுப்பிரமணியன்
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் கேட்ட போது சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி தவறு இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி குழந்தை பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு பிரபல மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

3 பேர் கொண்ட குழு
இதற்காக சுகாதாரத் துறை இணை இயக்குநர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் குழந்தை பெற்றனரா, தமிழக மருத்துவமனை என்றால் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

வாடகைத் தாய்
வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி பதிவு செய்த விவரம் அரசுக்கு அனுப்பப்பட்டதா, வாடகைத் தாய் முறை பதிவில் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் பெயர் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் தேவைப்பட்டால் நயன்தாரா- விக்னேஷ் சிவனிடமும் விசாரணை நடத்தப்படும் என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விசாரிப்பு
நயன்தாரா அண்மையில் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் அந்த மருத்துவமனையிலிருந்து விசாரணை தொடங்கப்படுகிறது. உடல்நல பாதிப்புக்காக அட்மிட் ஆன நயன்தாரா, வாடகை தாய் முறைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். இந்த 3 பேர் கொண்ட குழுவினர் சமர்ப்பிக்கும் அறிக்கை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவ இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications